நரசிம்ம அவதாரம் பல நன்மைகளை அளிப்பதற்காக இந்த பூமியில் அவதரித்த அவதாரமாக பார்க்கப்படுகிறது இந்த அவதாரம் நாம் வணங்குவதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் குறிப்பாக நரசிம்மரை போற்றி என்று சொல்லி அவரை வணங்கும்போது அவர் மன மகிழ்ந்து நமக்கு பல நன்மைகளை கொடுப்பார் என்பது ஐதீகம் நரசிம்மரை போற்றி என்பதை தான் சமஸ்கிருதத்தில் சொல்வார்கள் நாம் தமிழில் சொல்கிறோம் அவ்வளவுதான் நீங்கள் நரசிம்ம ர் எங்கிருந்தாலும் அல்லது புகைப்படம் இருந்தாலும் அல்லது மனதில் நினைத்தாலும் நரசிம்மரை போற்றி என்று சொல்லி அவரை நினைத்து மனமார வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் கைகூடி வரும்.
வாருங்கள் நரசிம்ம அவதாரமாகிய பெருமானை வழிபாடு செய்வதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நரசிம்ம வழிபாட்டு பலன்கள் :-
★ நரசிம்மரை வழிபாடு செய்வதால் மன உறுதி அதிகரிக்கும் தைரியம் அதிகரிக்கும்.
★ மன பயம் நீங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மனதில் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் நரசிம்ம அவதாரத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
★ கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும்.
★ எடுத்த காரியம் தடைபட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் கண்டிப்பாக நரசிம்ம வழிபாடு பயனை கொடுக்கும்.