சாய் பக்தர்களுக்கு வணக்கம் நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சாய்பாபாவின் பொன்மொழிகளை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்
சாய் அப்பா நம்மோடு இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு முன் அவர் சென்று, அந்த காரியத்தை எளிதாக செய்து முடித்துவிட்டு நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்
நீங்கள் இன்று பிரச்சனையாக என்ன கூடிய அத்தனை விஷயத்தையும் சாய் அப்பா ஏற்கனவே தீர்த்து விட்டு, தீர்ந்த பிரச்சனை தீர வேண்டும் என்று சாய் அப்பாவிடம் தினமும் புலம்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் மன கஷ்டத்தில் இருக்கும்போது உங்களை சுற்றி நடக்கக்கூடிய அத்தனை நல்ல விஷயங்களும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பது உண்மை
எல்லாம் வல்ல சாய்நாத் உங்களோடு இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறர் இனி வரும் காலம் வசந்த காலமாக அமையப்போகிறது.