நம் உடலில் ஏற்படுகின்ற சூட்டு கட்டிகள் பழுத்து உடைய நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை:-
நம் உடலின் வெப்பத்தால் ஏற்படுகின்ற கட்டிகள் உடைய. நீண்ட நாள் ஆறாமல் இருக்கக்கூடிய புண் ஆற எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பயன்படுத்தக்கூடிய ஒரு வைத்தியம். இதனால் எந்த பக்க விளைவும் கிடையாது தாராளமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட இதை பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உங்கள் உடலில் சூட்டு கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு கொண்டே இருந்தால் கண்டிப்பாக நீங்கள் சர்க்கரையின் அளவை சோதித்துப் பார்க்க வேண்டும். அப்படி உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டு அருகாமையில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இது சர்க்கரை நோய் உள்ளவர்கள். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்துவது நல்லது.
மூலப்பொருள்
சேப்பங்கிழங்கை அரைத்து உடலில் கட்டி எங்கெல்லாம் உள்ளது அதன் மீது வைத்து ஒரு காட்டன் துணியாள் கட்டுவதன் மூலமாக சேப்ப கிழங்கில் இருக்கக்கூடிய சாறு அதில் ஊறி அந்த கட்டி பழுக்கும். அது மட்டுமல்லாமல் எங்கேனும் அடிபட்டு இருந்தால் அடிப்பட்ட புண்மீது இந்த சேப்பக்கிழங்கு சாற்றை தடவுவதன் மூலமாக அந்த புண் ஆறும்.
விளக்கம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட இதை பயன்படுத்தலாம் ஆனால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் மட்டுமே. சர்க்கரை நோய் இல்லாத அத்தனை பேருமே இதை பயன்படுத்தலாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்தவித பக்க விளைவும் அல்லாமல் எளிமையாக நாம் வீட்டிலேயே இருந்து கொண்டு நம் உடலுக்கு நாம் வைத்தியத்தை பார்த்துக் கொள்ள முடியும். இன்று வெப்பத்தால் அதிகளவு நம் உடல் தாங்குவதில்லை காரணம் சூரியனின் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் நம் உடலில் எங்கும் கட்டிகள் வந்து அது பழுக்காமல் நமக்கு வலியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தால் அதன் மீது இந்த சேப்பகிழங்கை தடவுவதன் மூலமாக அந்த சேப்பகிழங்கின் அரைத்து அதில் மீது வைத்து ஒரு காட்டன் துணையால் கட்டுவதன் மூலமாக அது பழுத்து உடைந்து உள்ளிருந்து சீவுகள் வரப்படும் இதனால் நமக்கு வழிகளும் குறையும் நன்மைகளும் ஏற்படும் நம் முன்னோர்கள் சொன்ன எளிமையான வீட்டு மருத்துவ முறை..