நம் மேல் இருக்கக் கூடிய கண்திருஷ்டி களை எளிதில் போக்கிக்கொள்ளக்கூடிய எளிய வழிமுறைகளை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்:-
மனிதன் ஒவ்வொருவரும் கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது என்பார்கள். ஏனென்றால் கல்லடி கண்ணுக்குத் தெரிந்து விடும் கண்களால் விழக்கூடிய அடி கண்ணுக்குத் தெரியாது அது நம்மை சுற்றி இருக்கக்கூடிய நல்ல விஷயங்களையும் நமக்கு ஏற்படுகின்ற நல்ல செயல்களையும் தடுத்து நிறுத்தி விடும் அதனால் தான் நம் முன்னோர்கள் கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது என்பார்கள்..
அப்படி நமக்கு ஏற்படுகின்ற கண்ணடி அதாவது கண் திருஷ்டியில் இருந்து எப்படி நம்மை பாதுகாப்பது என்பதை பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த கண் திருஷ்டி என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று குழந்தைகள் இன்னொன்று பெரியவர்கள்.
குழந்தைகள் கண் திருஷ்டி கழிக்கும் முறை :-
முதலில் குழந்தைகள் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்
1. குழந்தைகளின் நெற்றியில் கருநிறம் மையால் பொட்டு வைப்பது பிறகு அவர்களுடைய இடது கால் பாதத்தில் கருநிறம் கொண்ட மையால் பொட்டு வைப்பது இது குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து பாதுகாக்கும்.
2. ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அதில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு கொஞ்சம் மஞ்சள் கொஞ்சம் குங்குமம் இரண்டையும் கலந்து வெற்றிலை பாக்கு வைத்து அதன்மீது கற்பூரம் ஒன்று வைத்து அதை பற்ற வைத்து அந்த குழந்தையை சுற்றி வீட்டுக்கு வெளியில் ஊற்றுவது இதற்குப் பெயர் ஆழம் கரைத்து ஊற்றுவது என்று ஒரு பெயர் உண்டு.
3. குழந்தைக்கு தண்ணீர் ஊற்றும்போது( குளிப்பாட்டும்போது) கடைசியாக ஊத்த கூடிய தண்ணீர் அதை ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு அந்தக் குழந்தையை நிக்கவைத்து மூன்று முறை இடது புறம் மற்றும் வலது புறம் சுற்றி காலில் ஊற்றுவது இது ஒரு வகையான கண் திருஷ்டியை அழிப்பதற்கு சமம்..
பெரியவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்கும் முறை:-
1. கைநிறைய உப்பை எடுத்துக் கொண்டு நாம் யாருக்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவரை கிழக்கு பார்த்தவாறு நிற்க வைத்துவிட்டு இடது புறம் மூன்று முறை வலது புறம் மூன்று முறை நேராக மூன்று முறை ஏற்றம் இறக்கம் வாங்கி அந்த உப்பை எடுத்துக் கொண்டுபோய் தண்ணீரில் கரைத்து விடுவது இது ஒரு வகையான கண் திருஷ்டி கழிக்கும் முறை
2. ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் கல் உப்பை கலந்து அந்த தண்ணீரை நாம் ஊற்றிக் கொள்வதின் மூலமாக நம் மேல் இருக்கக்கடிய கண் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்
3. நம் வீட்டில் இருக்கக்கூடிய பூதுடைப்பம் ஒரு சிறிய அளவு ஒரு இருபது குச்சிகள் எடுத்துக்கொண்டு அதை நாம் யாருக்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவரை கிழக்கு பார்த்தவாறு நிற்க வைத்து விட்டு இடது புறம் வலது புறம் மூன்று முறை சுற்றி அதை நாம் நெருப்பு வைத்து பற்றவைத்தால் படபடவென்று வெடிக்கும் அதன் மூலமாக நமக்கு எந்த அளவு கண் திருஷ்டி இருக்கிறது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும் மற்றும் கண் திருஷ்டி கழியும் என்பது ஐதீகம்..
இவ்வாறு செய்வதன் மூலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்கள் மீது இருக்கக்கூடிய கண் திருஷ்டியை நம்மால் போக்கிக்கொள்ள முடியும