நட்சத்திரம் என்றால் என்ன .? ராசி மண்டலம் என்றால் என்ன.?
What is mean by Natchathiram / What is mean by Rasi mandalam

நட்சத்திரமும், ராசி மண்டலமும்
ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒவ்வொருவருடைய ஜாதகத்தை கணிப்பதற்கு நட்சத்திரம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே ஒருவருடைய ஜாதகத்தில் என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கப்படுகிறது
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ? அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ? அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரம் மொத்த 27 ஆகும். இங்கு ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு 1, 2, 3, 4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.