தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். குறிப்பாக வாராஹி அம்மனை வழிபாடு செய்வது பல வெற்றிகளையும் குவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் ராஜராஜ சோழன் போருக்கு போர் அதற்கு முன் வாராகி அம்மனை வழிபாடு செய்து விட்டு செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார். ஏனென்றால் போகக்கூடிய காரியத்தில் வெற்றிகளை கொடுக்கக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் இருந்து கொண்டிருக்கிறார் அதனால் தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்வது எப்படி என்பதை பார்க்கப் போகின்றோம்.
தேய்பிறை பஞ்சமி வழிபாடு முறை
புதன்கிழமை தேய்பிறை பஞ்சமி திதியில் நீங்கள் வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலமாக கடன் தொல்லை நீங்கும் மற்றும் கடன் பிரச்சினை வராமல் பாதுகாக்கும் அது மட்டுமல்லாமல் நீங்கள் எந்த காரியம் செய்வதற்கும் முன்னும் வாராகி அம்மனை வழிபாடு செய்து விட்டு செல்வதன் மூலமாக அது உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் குறிப்பாக எதிரிகளின் தொல்லைகள் விலகும்.