தேய்பிறை அஷ்டமி உண்மையிலேயே கால பைரவருக்கு உகந்த ஒரு நாளாக பார்க்கப்படுகிறது இந்த தேய்பிறை அஷ்டமி அன்று நாம் எப்படி கால பைரவரை வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள் கால பைரவரை தேய்பிறை அஷ்டமி என்று வழிபடும் முறையை தெரிந்து கொள்வோம்.
கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது எப்படி
தேய்பிறை அஷ்டமி நாளில் நீங்கள் கால பைரவருக்கு பஞ்ச தீப விளக்கு ஏற்றி பைரவரே போற்றி என்று 108 முறை துதிக்க வேண்டும் அவருக்கு அருகாமையில் அமர்ந்து இப்படி செய்வதன் மூலமாக நினைத்த காரியங்கள் கைகூடும். அது மட்டுமல்லாமல் சனீஸ்வரனின் உடைய குருவாகத் திகழக்கூடிய கால பைரவரை வணங்குவதன் மூலமாக சனீஸ்வரனின் உடைய தாக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக அளவு இருந்தால் அது குறைக்கப்படும்