பிறந்த நட்சத்திரம் : விசாகம் குணங்கள்
உங்கள் ஜென்ம நட்சத்திரம் விசாகம், ஆகையால் பொதுவாக தாங்கள் மனச்சஞ்சலம் உடையவராகவும், மனதில் சந்தோஷம் இல்லாதவராகவும் இருப்பீர்கள். தாங்கள் செல்வத்தையும் புகழையும் சம்பாதிப்பீர்கள். நீங்கள் பணத்தை வீண் செலவு செய்ய மாட்டீர்கள். எனினும், உங்களிடமிருந்து எப்படிப் பணம் செல்கிறது என எண்ணி. ஆச்சரியப்படுவீர்கள். நல்ல சண்டைகள். மனக் குரோதங்கள். திரைப்படங்கள் ஆகியவைகளை ரசிப்பீர்கள்.
பிறரோடு நல்ல விவாதம் செய்யும் தனித் திறமை தங்களுக்குண்டு சரியான முறையில் பிறரைப் புகழ்வது அல்லது குறை சொல்வது ஆகியவற்றில். தாங்கள் திறமையானவர். தங்கள் சிந்தனைகள் நடைமுறைக்குகந்தவை. தாங்கள் அதிகாரம் செய்வதைக் கடைப்பிடிப்பீர்கள். தாயிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. தங்கள் தகப்பனாரின் கடுமையான பிடியில் அதிகநாள் இருக்கமாட்டீர்கள். நீங்கள் பரந்த உள்ளம் கொண்டவர்: சுயசிந்தனை உள்ளவர்: பிறரிடம் அனுதாபம் உள்ளவர். நியாயமான மனம் உள்ளவர். புதிய விவகாரங்கள். நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வதில் தாங்கள் ஆர்வம் மிக்கவர், உங்கள் குடும்பத்தாருடன் நெருங்கிய உறவு கொண்டவர். ஆனால் உங்களை எதிர்க்கின்றவர்கள். உங்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பவர்கள் ஆகியோரின் வலையில் விழுந்துவிடாமல் இருக்குமாறு தங்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. தாங்கள் பிறரின் தேவையில்லாத நெருக்குதலுக்கு இணங்க குறைவாகப் பேசுவீர்கள்: மிக நேர்மையானவர். மாட்டீர்கள். தாங்கள்
விசாக நட்சத்திரத்தின் மிருகம், விருக்ஷம், கணம், யோனி போன்றவை பின்வருமாறு
மிருகம்* புலி. விருக்ஷம் * விளா. கணம் – ராக்ஷச, யோனி பெண் பக்ஷி செங்குருவி. பூதம்
ஆகாயம், தேவதை இந்திரன், நாமம் தி.து.தே.தோ
விசாக நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் சாஸ்திர விதிகளின்படி மேலே குறிப்பிட்டுள்ள உங்கள் பக்ஷி மிருகாதிகளுக்கு துன்பம் விளைவிக்காமலும், கவனமாக பாதுகாத்தும் வந்தால் நீண்ட ஆயுளும், சகல சௌபாக்கியங்களும் நிறைவுற பெறுவீர்கள்.