மாதம் தோறும் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரத்தன்று திருவோணம் விரதம் இருப்பதன் மூலமாக நமக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை பற்றி இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் அதற்கு முன் திருவோண விரதம் எப்படி தொடங்கப்பட்டது அதனுடைய கதையை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
மகாபலி என்ற ஒரு அரசன் தேவர்களாக மாற வேண்டும் என்று எண்ணத்தில் யார் எதைக் கேட்டாலும் அவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் அப்படி தானமாக கொடுத்தால்தான் தேவர்களாக முடியும் என்று எண்ணத்தில் யார் எதைக் கேட்டாலும் தானமாக கொடுத்துக் கொண்டிருந்தார் மகாபலி அரசன். இதை பார்த்த தேவர்கள் திருமால் இடம் போய் ஏற்கனவே ஊருக்குள் இருக்கக்கூடிய அரக்கர்கள் போதாது என்று இப்போது புதிதாக மகாபலி என்ற ஒரு அரசன் தேவர்களாக மாற வேண்டும் என்று அனைவருக்கும் தானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான் இதை திருமால் ஆகிய உங்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று தேவர்கள் அத்தனை பேரும் திருமாலிடம் முறையிட்டுக் கொண்டிருக்கின்றன.
திருமாலும் தேவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு வாமன அவதாரம் எடுத்து மகாபலி அரசனை பார்த்து தானம் கேட்க செல்கிறார் அதேபோல் மகாபலியும் வாமன அவதாரமாக இருக்கக்கூடிய திருமாலைப் பார்த்து கேட்கின்றார் உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் நான் தருகிறேன் என்று கேட்கிறார் அதுக்கு வாமன அவதாரம் எடுத்த திருமால் நான் மூன்று அடி எடுத்து வைக்கின்றேன் எனக்கு அந்த மூன்று அடி இடம் கொடுத்தால் போதும் என்று வாமன அவதாரம் எடுத்த திருமால் கேட்கின்றார்.
மகாபலி கோ சிரிப்பு தாங்கவில்லை வாமன அவதாரம் எடுத்த திருமால் பார்ப்பதற்கு குழந்தையாக தெரிவார் குழந்தை தோற்றம் தான் வாமன் அவதாரம் அப்போது மகாபலி சிரித்துக்கொண்டே உங்கள் சிறுபாதம் என்னுடைய கையில் பாதி தான் இருக்கிறது இதில் 3 அடி இடம் போதுமா கேளுங்களே ஒரு கோடி 2 கோடி என்று கேளுங்கள் நான் தாராளமாக தருகின்றேன் என்று மகாபலி சொல்கின்றார்.
திருமால் உடனடியாக வாமன அவதாரம் எடுத்த திருமால் தானம் கேட்பதற்கு கூட ஒரு வரைமுறை இருக்கிறது அதை நான் எப்போதும் மீற மாட்டேன் எனக்கு என் காலடிகளில் மூன்று அடிக்குத் தேவையான இடத்தை மட்டும் கொடுங்கள் அது போதும் எனக்கு என்று வாமன அவதாரம் எடுத்த திருமால் சொல்கின்றான், அதற்கு மகாபலியும் சரி எடுத்து வையுங்கள் என்று சொல்கிறார் உடனே வாமன அவதாரம் எடுத்த திருமால் கையில் இருக்கக்கூடிய கமண்டலம் இருந்து தண்ணீர் ஒரு சொட்டு தன்னுடைய கையில் வந்து விழுகிறது அதாவது வாமன அவதாரம் எடுத்த திருமாலின் கையில் விழுந்த உடனே அவர் எல்லையில்லாத வளர்ச்சி அடைய ஆரம்பித்து விடுகிறார் வானம் உயர்ந்து உச்சியை தொடும் அளவிற்கு வாமன அவதாரம் எடுத்த திருமால் வளர்ந்து விடுகிறார்.
பூமியில் ஒரு அடி வானத்தில் ஒரு கால் தூக்கி ஒரு அடி மற்றொரு அடி அதாவது மூன்றாவது அடி நான் எங்கு வைக்கட்டும். என்று மகாபலி இடம் வாமன அவதாரம் எடுத்த திருமால் கேட்கின்றார் அதற்கு மகாபலி சொல்கின்றார் என்னுடைய தலையில் மூன்றாவது அடியை வையுங்களே என்று அதேபோல வாமன அவதாரம் எடுத்து திருமால் அவருடைய காலால் மகாபலி என்னுடைய தலையில் வைத்து பூமியில் அழுத்தி விடுகிறார்.
பிறகு வாமன அவதாரம் எடுத்த திருமால் சொல்கிறார் மகாபலி உன்னுடைய வேண்டுதல் நிச்சயமாக பலிக்கும் நீ தவத்தால் மட்டுமே தேவர்களாக பிறக்க முடியும் இன்றிலிருந்து நீ தவம் செய் நிச்சயமாக அடுத்த தேவர்களாக நீயும் பிறப்பாய் என்று ஒரு ஆசீர்வாதத்தை அவர் கொடுக்கின்றார் அதேபோல மகாபலியும் தவத்தை புரிகின்றார்.
ஆண்டுக்கு ஒரு முறை மகாபலி தன்னுடைய மக்களை பார்ப்பதற்காக மக்களினுடைய சந்தோஷ நிலைகளை அறிந்து கொள்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை மகாபலி வெளியே வருவதாக கேரள மக்கள் இன்றும் நம்பி கொண்டாடிக் கொண்டிருக்கின்றன அவரை வரவேற்கும் விதமாக மலர்களால் கோலமிட்டு 64 வகையான உணவுகளை செய்து அவருக்காக இன்றும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இதுதான் திருவோண விரதத்தின் சுருக்கமான கதை.
திருவோண விரதம் இருப்பது எப்படி:
காலையில் எழுந்தவுடன் நீராடி விட்டு பெருமாளின் நாமத்தை சொல்ல வேண்டும் குறிப்பாக வாமன அவதாரம் எடுத்த பெருமாளின் ஸ்லோகத்தை சொல்வது மிகவும் நல்லது அதன் பிறகு உணவு அருந்தாமல் விரதம் இருந்து அல்லது விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் பழங்களையும் அல்லது உப்பில்லாத பண்டத்தையோ சாப்பிடலாம் அல்லது என்னால் விரதம் இருக்க முடியும் என்று சொல்லக்கூடியவர்கள் அன்று முழுவதும் விரதம் இருந்து மாலை 6 மணி அளவில் வாமன அவதாரம் எடுத்த புகைப்படம் இருந்தால் பூஜை அறையில் வைத்து அல்லது வான் அளந்த பெருமாளின் புகைப்படம் இருந்தால் அதையாவது வைக்கலாம் அதுவும் இல்லை என்றால் திருப்பதி ஏழுமலையானின் புகைப்படத்தை வைத்து வணங்க வேண்டும் அவருடைய நாமத்தை சொல்ல வேண்டும்.
அதன் பிறகு அவருக்கு தேவையான பூஜைகளை செய்து விட்டு அவருக்கு பிடித்தமான பொங்கல் அல்லது நெய்வேதியங்கள் பழங்கள் வைத்து படைத்து உங்கள் விரதத்தை முடிப்பதற்கு முன் கடைசியாக நீங்கள் சந்திர பகவானை வணங்க வேண்டும் சந்திர பகவானை வணங்கி விட்டு உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம் கடைசியாக ஏன் சந்திர பகவானை வணங்க வேண்டும் என்றால் சந்திரனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் நிவர்த்தி அடையும் என்பது ஒரு ஐதீகம் சோ ஒவ்வொரு திருவோண விரதம் இருக்கும் போது மாலையில் சந்திரனை வணங்கி உங்களுடைய பிரார்த்தனை முடிப்பது நல்லது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவோணம் கொண்டாடப்படுகிறது மாதத்திற்கு ஒருமுறை திருவோண விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாக பெருமாளின் உடைய நேரடியான பலனை ஒவ்வொரு பக்தர்களும் பெறுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை என்றாலும் இருந்து கொண்டிருக்கிறது இதைக் கேரள மக்கள் கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கிறார்கள் சோ பள்ளிகொண்ட பெருமாள் திருவோண விரதம் இருந்த வாமன அவதாரம் எடுத்த பெருமாள் அல்லது திருப்பதியில் இருக்கக்கூடிய நாராயணன் இப்படி யாராக இருந்தாலும் வணங்கினால் நிச்சயமாக உங்களுக்கு கைகூலி வரும்.
திருவோணம் விரதம் இருப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும்:
திருவோண விரதம் இருப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்த்தால் தொழில் வளர்ச்சி இல்லாதவர்களுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை ஏற்படும் இடம் வாங்காதவர்கள் மனை வாங்காதவர்கள் இருந்தால் வாங்குவதற்கான அத்தனை வழிகளையும் பெருமாள் காட்டுவார் பணகஷ்டம் மன கஷ்டம் தொழில் கஷ்டம், உறவுகள் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போவது இப்படி ஏகப்பட்ட தடங்கல்கள் இருந்தாலும் இது திருவோண விரதத்தின் மூலமாக நிச்சயமாக எல்லாம் நிவர்த்தி அடைந்து நல்லதே நடக்கும் என்பது ஐதீகம் இன்று வரை மக்களும் அதன் அடிப்படையிலேயே நடந்து கொண்டிருக்கின்றன பல நன்மைகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன….