திருவோணம் நட்சத்திரம் குணங்கள் / Thiruvonam Natchathiram Kunangal ( Character) in tamil

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:
திடீரென கோபப்படும் குணம் கொண்டவர்கள், ஆனால் உடனே சமாதானமும் அடைந்து விடுவார்கள்.
எதிலும் கவனமாக செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
பசி தாங்காதவர்கள்,
சிக்கனமாக இருக்கக்கூடியவர்கள்.
பெரியவர்களிடத்தில் மரியாதை உடன் நடக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி தண்டிக்கக்கூடியவர்கள்.
சுத்தமான ஆடைகள் அணிவதை விரும்பக்கூடியவர்கள்.
சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
தன்னால் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.
எதிலும் தெளிவான சிந்தனைகளை கொண்டவர்கள்.
நுண்கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
எல்லா சூழ்நிலைகளிலும் புன்னகையுடன் இருக்கக்கூடியவர்கள்.
முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.
மற்றவர்களின் மனம் அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
அழகிய உடல் தோற்றம் கொண்டவர்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
யாரையும் துன்புறுத்த எண்ணாதவர்கள்.