எங்களுக்குத் திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறோம். திருமணம் நடந்த நேரம் சரியில்லை. தாலியைக் கழற்றினிட்டு நல்ல நேரத்தில் மீண்டும் தாலி கட்டினால் பிரச்னை தீர்ந்து விடும் என்று ஒரு ஜோதிடர் கூறுகிறார். தங்கள் கருத்து என்ன?
இது மிகவும் தவறான கருத்து. கட்டிய தாலியைக் கழற்றுவது அமங் கலச் செயல், அது ஏற்புடையதல்ல. பிறந்த நேரத்தை எப்படி மாற்ற முடியாதோ. அதேபோலத் திருமணம் நடந்த நேரத்தையும் மாற்ற முடியாது. கணவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனே தாலியைக் கழற்றி உண்டியலில் போடுவதாகச் சில பெண்கள் பிரார்த் தனைச் செய்துகொள்கின்றனர். அதுவே தவறு என நாள் சொல்லி வருகி றேன். பணக் கஷ்டம் நீங்க லஷ்மி சகஸ்ரநாமம் படித்து வாருங்கள். மறுதாலி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.