திருமணம் நடக்க தாமதமாவது எதனால்.? திருமணம் தடைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரினுடைய வாழ்க்கையிலும் திருமண நிகழ்ச்சி என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் திருமணம் நடக்க தாமதமாவது எதனால் திருமண தடைகள் நீங்கி நமக்கு திருமணம் எளிதில் நடக்க நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான பரிகாரம் செய்தால் தான் திருமணம் சீக்கிரமாக நடக்குமா? என்ற கேள்விகளுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக மனிதனாகப் பிறந்தால் பிறக்கும் போதே கடவுள் யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்ன நடக்க வேண்டும் என்பதை எழுதி வைத்துவிட்டார் அதன்படி தான் இங்கு எல்லாமே எல்லா விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் நமக்கு திருமணம் எப்போது நடக்க வேண்டும் என்று கணவன் தீர்மானித்து விட்டான். அதன் அடிப்படையில் அந்த நேரம் நமக்கு கூடும் போது நமக்கு திருமணம் நடக்கும் இதுதான் உண்மை.
நம் பரிகாரம் செய்வதாலோ அல்லது நாம் ஏதாவது தோஷங்கள் நிவர்த்தி செய்வதால் நமக்கு எளிதில் திருமணம் நடக்குமா என்றால் நடக்காது தடைகளின் உடைய தாக்கம் குறையுமே தவிர ஆனால் எப்போது கடவுள் நமக்கு தலையில் எழுதப்பட்டிருக்கிறாரோ அப்போதுதான் திருமணம் நடக்கும் இதுதான் உண்மை.
அதுவரை முயற்சி செய்யலாம் தவறில்லை முயற்சி செய்து கொண்டே இருந்தால் கடவுள் அருளால் ஒரு நாள் நமக்கு கிடைக்கும் ஆனால் கடவுளை மனதார வேண்டினால் அதனுடைய தாக்கம் குறைத்து எளிதில் நமக்கு கிடைப்பதற்கான வழிகளை அவர் செய்வார் அதனால் கடவுளை மனதார வணங்குங்கள் கண்டிப்பாக திருமண தடை நீங்கி ஒரு நல்ல மாற்றம் உங்களுக்கு கிடைக்கும் எளிதில் திருமணமும் நடக்கும் நல்ல வரன் உங்களை தேடி வரும்.