திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் அப்படிப்பட்ட திருமணத்தை நடத்திவிட முடியாது பல தடங்கல்கள் இன்னல்கள் தாண்டிதான் ஒருவருக்கு ஒரு திருமணம் நடக்கின்றன திருமணம் நடக்கக் கூடியவர்கள் வணங்க வேண்டிய தெய்வத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்
திருமணத்திற்கு மிக உகந்த தெய்வம் முருகப் பெருமான்.
உங்கள் வீட்டில் முருகர் வள்ளி தெய்வானை மூன்று பேரும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள் அந்த புகைப்படத்திற்கு முன் அகல் விளக்கில் தீபம் ஏற்றி தினமும் முருகனை பிரார்த்தனை செய்ய வேண்டும் இப்படி தொடர்ந்து ஒன்பது வாரம் செய்து வர நிச்சயமாக நல்ல பலனை உங்களால் காண முடியும். தினமும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக செவ்வாய்க்கிழமை முருகர் பிறந்தநாள் அன்று செய்தால் மிகவும் நற்பலனை கொடுக்கும்
வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று குறிப்பாக செவ்வாய்க்கிழமை சென்று முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நிச்சயமாக திருமணத்தடை நீங்கி எளிதில் நல்ல வரன் அமைய எல்லாம் வல்ல முருகன் துணையாக நின்று திருமணம் செய்து வைப்பார் என்பது ஐதீகம்
குறிப்பாக யாருக்கு திருமணம் நடக்க வேண்டுமோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை அவர்கள் அடைவார்கள்
9 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்தும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் முருகனை வேண்டிக் கொண்டே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விளக்கேற்றிவிட்டு பெண் பிள்ளையை அல்லது மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியை செய்து கொண்டே இருங்கள் நிச்சயமாக கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்
(உங்கள் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும்)