தினம் தோறும் நமக்கு நல்லது நடக்க இந்த மந்திரத்தை சொல்ல மறந்து விடாதீர்கள்

உங்களுடைய வாழ்க்கையில் தினமும் நல்ல நேரமாக அமைய வேண்டுமென்றால். நான் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் உச்சரித்து வந்தால் நிச்சயமாக அன்றைய நாள் உங்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் உங்களுக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும்

பொதுவாக நாம் செய்யக்கூடிய நல்ல விஷயம் கெட்ட விஷயம் என்று இரண்டு இருக்கும். இந்த இரண்டிற்கும் பலன்கள் உண்டு, குறிப்பாக நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று எந்த கடவுள் நம்மை கண்காணிக்கிறாரோ இல்லையோ நிச்சயமாக சனிபகவான் நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பார், நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று.

ஆம் இன்று சனி பகவானை சாந்தப்படுத்த நாம் இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரித்து வந்தால் நிச்சயமாக நம் வாழ்க்கையில் அனைத்து நன்மையாகவே நடக்கும்.

மந்திரம்

இந்த மந்திரத்தை தினம்தோறும் அதிகாலையில் எழுந்தவுடன் சொல்லி வந்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும். பொதுவாக இந்த மந்திரத்தை ஆண் பெண் குழந்தைகள் மூவரும் சொல்லலாம் இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை. நாம் ஏன் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டுமென்றால் இந்த மந்திரம் சனிபகவானை சாந்தப்படுத்துவதற்காக சொல்லப்படுகின்ற மந்திரம், இது மூல மந்திரம் ஆகும். அதாவது அருணகிரிநாதர் சொல்லப்பட்ட மந்திரத்தை தினம்தோறும் அதிகாலையில் சொல்லும்போது நமக்கு அந்த நாள் முழுவதும் நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.

இந்த மந்திரத்தை எப்போதெல்லாம் சொல்லவேண்டும் ஒன்று அதிகாலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லலாம் அல்லது எப்போதெல்லாம் நமக்கு பிரச்சினைகள் வருவது போல் தெரிகிறது அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும்போது நிச்சயமாக நமக்கு நல்ல பலன்கள் கைகூடிவரும்.

முடிந்தால் ஒவ்வொருவரும் திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி அங்கு இருக்கக்கூடிய சிவலிங்கத்தையும் வணங்கி வந்தால், அவர்கள் வேண்டிய அத்தனை விஷயங்களும் நடக்கும் அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சனிப்பெயர்ச்சி நடந்து கொண்டிருந்தாலும், அந்த பாதிப்பிலிருந்து அவர்களுடைய பாவங்கள் குறைக்கப்படும்.

இந்த மந்திரத்தை நீங்கள் மட்டுமல்ல உங்கள் பெற்றோர்கள் கணவன்-மனைவி என்று யார் வேண்டுமானாலும் இதை சொல்லலாம், மாமிசம் உண்ட பிறகு இதை சொல்லலாமா என்று ஒரு சந்தேகம் வந்தால் நிச்சயமாக சொல்லலாம் நீங்கள் மாமிசத்தை சாப்பிட்ட பிறகு கூட இந்த மந்திரத்தை தாராளமாக உச்சரிக்கலாம்

சனியினுடைய பார்வை நம்மீது நல்லவிதமாக வில வேண்டும் என்றால் உங்களுடைய நடு விரலில் நீல கல் மோதிரத்தை அணியலா. இதனால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் யாரெல்லாம் இதை அணிய வேண்டும் என்று பார்த்தால் சனியினுடைய பார்வை யாருக்கெல்லாம் விழுகிறதோ அல்லது உங்களுடைய லக்னத்தின் அடிப்படையில் நீங்கள் நீலக்கல் அணிய வேண்டும். உங்களுடைய ஜோசியர் சொன்னால் நீங்கள் தாராளமாக நீலக்கல்லை நடு விரலில் அணியலாம். அணிவதன் மூலம் உங்களுடைய அத்தனை விஷயங்களும் நல்லவிதமாக வெற்றிகரமாக நடைபெற்று முடியும் என்பது சத்தியம்

நீலக்கல் உங்களுடைய ஜாதகத்தில் அணியவேண்டும் என்று சொன்னால் மட்டுமே அணியுங்கள் இல்லையென்றால் அணிய வேண்டாம். ஏனென்றால் சனிபகவான் பார்வை நன்றாக நம் மீது விழ வேண்டும் என்றால் இது போன்று நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு பிறகு செய்வதால் நமக்கு சகல சவுபாக்கியங்களும் கிட்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top