தமிழ் கடவுள் முருகன் பெருமான் யார்.? who is Lord Murugan :-
கடவுள் முருகர் யார் என்று கேள்வி பல பேருக்கு இருக்கும் கண்டிப்பாக கடவுள் முருகர் உயிரோடு வாழ்ந்த ஒரு அரசர் என்று பலர் அதிகாரப்பூர்வ சில விஷயங்களை வைத்து சொல்கிறார்கள் பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு முன், முருகர் தமிழினத்தை ஆண்ட ஒரு மாபெரும் மண்ணனும். தமிழை வளர்த்த மிகப் பெரிய மஹானாக இருந்தார் என்று ஒருபுறம் சொல்கின்றன.
அதேசமயம் ஒரு சிலர் முருகப் பெருமான் ஒரு சித்தர் என்றும், அவர் தமிழில் நிறைய அதிகாரப்பூர்வ நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டுபிடித்தவர் ஆகவும். அதேசமயம் போர்களை எப்படி நடத்த வேண்டும் போர் பயிற்சி கொடுக்கக்கூடிய மிக தலைசிறந்த ஞானியாகவும் சித்தராகவும் இருந்தார் என்று ஒரு தரப்பு சொல்கின்றன.
எது எப்படியோ தமிழர்கள் வணங்கக்கூடிய அத்தனை கடவுள்களும் ஒரு காலத்தில் உயிரோடு வாழ்ந்து தமிழுக்காக பாடுபட்டு மக்களுக்காக அர்ப்பணித்த ஒருவரை தான் தமிழ் மக்கள் கடவுளாக வணங்கி வந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.