தன் பக்தையின் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய சாய்பாபா உண்மை கதை / Shirdi Sai baba Real Story in Tamil

சாய் பக்தர்களுக்கு வணக்கம் சாய் அப்பா தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்த்திய ஒரு உண்மை கதையை பற்றி இன்று நாம் பார்க்கப் போகின்றோம்..

Sai Baba lord

மகாராஷ்டிரா மாநிலத்தில் சூர்யா பாய் என்ற ஒரு பெண்மணி தீவிரமான சாய்பாபா பக்தர். தினம் தோறும் காலையில் எழுந்தவுடன் அவருடைய புகைப்படத்தை பார்க்காமல் அவர் உறங்குவது கிடையாது, வாரத்திற்கு இரண்டு முறை சீரடிக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய பாபாவை நேரில் கண்டு அவரிடம் பேசி ஆனந்தப்படாமல் இருப்பது கிடையாது. அப்படிப்பட்ட தீவிர பக்தரான சூரியா வாய்க்கு ஒரு மகன் ஒரே ஒரு மகன் அந்த மகனுக்கு முதுகில் ஒரு கட்டி அதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டது.

சூர்யா பாயும் மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய பல மருத்துவர் களை பார்த்து இந்த கட்டியை குணப்படுத்தும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அந்த மருத்துவர்கள் இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பரவாயில்லை என்று கேட்கிறார்கள். சூர்யா பாய்க்கு மிகவும் வருத்தம் கண்ணீரில் அவர்கள் நிலைமை ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் சத்குருவே என்று நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் சூர்யா பாய்.

இப்படியே மூன்று மாத காலம் மருத்துவமனையாக மருத்துவர்கள் பார்ப்பதாக சூர்யா பாய் சுற்றிக் கொண்டிருக்க சாய் அப்பாவை வாரத்திற்கு இரண்டு முறை சந்திக்கும் பழக்கத்தை மறந்து விடுகிறார். ஆனால் மனதிற்குள் சாயப்பா என்ற வார்த்தை ஒழித்துக் கொண்டு இருக்கிறது. என்னுடைய மகனை எப்படியாவது காப்பாற்றிவிடு உன்னையே நம்பி இருக்கின்றேன் என்னை கைவிட்டு விடாதே என்று தினம் தோறும் அவருடைய நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் சூர்யா.

மூன்று மாதம் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய சூர்யா பாய் தன்னுடைய வீட்டுக்கு வருகிறார். வந்து தன்னுடைய பிள்ளையை அங்கு இருக்கக்கூடிய படுக்கையில் படுக்க வைத்து விட்டு பூஜை அறைக்குள் இருக்கக்கூடிய சாய்பாபாவின் புகைப்படத்தை பார்த்து கண்ணீரோடு கேட்கிறார், என் பிள்ளையை காப்பாற்ற மாட்டாயா? உன்னையே நம்பி இருக்கின்றேன் என்னை கைவிட்டு விடாதே என்று கண்ணீரோடு மனமுருகி கேட்டுக் கொண்டிருக்கிறான்.

Saibaba

சூர்யா பாயின் பிள்ளை படுக்கையில் இருந்து அவருடைய அம்மாவிடம் எனக்கு பசி எடுக்கிறது என்று கேட்க சூர்யா பாய் அங்கிருந்து தன் பிள்ளைக்கு உணவு வாங்கிக் கொண்டு வர வெளியில் வருகிறார். அப்படி வரும் நேரத்தில் அந்த பிள்ளை கமந்து படுத்துக் கொண்டிருக்கிறது மேலே இருந்த ஓடு ஒன்று உடைந்து ஒரு சிறு ஓடு அந்த கட்டியின் மீது வந்து விழுகிறது அந்த கட்டி உடைந்து அதிலிருந்து அத்தனை நச்சுப் பொருட்களும் வெளியே வருகிறது அந்த சிறுவனின் வலியும் குறைகிறது.

வீட்டுக்கு உணவு வாங்கிக் கொண்டு வந்த சூர்யா பை பார்த்தவுடன் ஒரு அதிர்ச்சி மருத்துவர்கள் கூட இதை உடைத்தால் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள் ஆனால் இது உடைந்து விட்டது என் மகன் நன்றாக இருக்கின்றானே என்று ஒரு சந்தோஷம் சூர்யா பைக் ஏற்பட்டு அங்கிருந்து சாய் அப்பாவை காண சீரடிக்கு வருகிறார்.

கண்ணீரோடு துவாராக மாயிக்குள் நுழைய நுழைய சாய் அப்பா சிரித்துக்கொண்டே கேட்கிறார் உன் மகனின் கட்டி இப்போது உடைந்து விட்டது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை இப்போது எப்படி இருக்கிறார் என்று கேட்கிறார்.

இதை கேட்ட உடனே சூர்யா பாய்க்கு தாங்க முடியாத அழுகை தகப்பனே என் மகனின் உயிரை காப்பாற்றியது நீதானா என்று ஆனந்தக் கண்ணீரில் அங்கு கூச்சலிட்டு கத்தி அழுகிறாள்..
ஆம் சாயப்பாவை நம்பிய ஒருவரையும் அவர் வாழ்ந்த காலத்திலும் சரி இன்றும் சரி அவர் கைவிட்டதாக சரித்திரமே இல்லை அன்று இருந்த சாயின் பக்தர்களை விட இன்று ஏராளமாக வளர்ந்து கொண்டு போய் விட்டார்கள் என்பதுதான் உண்மை இதற்கு காரணம் அவருடைய சக்தி கேட்டதை கொடுக்கும் வல்லமை கொண்ட மகான்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top