ஷீரடியில் சுரேஷ் ராவ் என்பவர் வசித்துக் கொண்டிருந்தார் அவர் தீவிரமான சாய்பாபா பக்தர் தினமும் பாபாவின் புகைப்படத்திற்கு பூஜை செய்யாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். அப்படிப்பட்டவருக்கு சாய் அப்பா வீட்டிற்கு வந்த கதையை இன்று நாம் பார்க்கப் போகிறோம்
சுரேஷ் ராவ் என்பவர் மிகவும் வறுமை நிறைந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வைத்து ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தவர், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு புதிதாக வீடு கட்ட ஆசைப்பட்டு வீடு கட்ட தொடங்கினார்
கொஞ்ச காலம் சென்று கொண்டிருந்தது வீட்டு வேலையும் முடிவுக்கு வரும் நிலைக்கு வந்துவிட்டது ஒரு நாள் சுரேஷ் அவர்களுடைய மாமா சுரேஷ் ராவத் தேடி தன்னுடைய வீட்டுக்கு வந்தார். சுரேஷ் ராவ் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருப்பது பற்றி அவர் மாமாவிடம் தெளிவாகச் சொன்னார்
ஒருநாள் எதர்ச்சியாக பாபாவின் புகைப்படத்தை சுரேஷ் மாமா வாங்கிக்கொண்டு வந்து சுரேஷ் ராவிடம் கொடுத்தார், நீ புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கின்றாய் இந்த சாய்பாபாவின் புகைப்படத்தை உன் வாசலுக்கு முன்னால் ஒட்டி வைத்து விடு என்று ஒரு புகைப்படத்தை விலை உயர்ந்த அந்த பாபாவின் உருவ சிலையை புகைப்படமாக கொண்டு வந்து சுரேஷ் ராவிடம் கொடுத்தார் மாமா
சுரேஷ் ராவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை புதிதாக வீடு கட்டி முடித்துவிட்டு சீரடிக்கு சென்று ஒரு விக்கிரகத்தை வாங்கிக் கொண்டுவந்து புதிய வீட்டில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தார் சுரேஷ், ஆனால் சாய் அப்பாவே தன் வீடு தேடி வந்து அமர்ந்தார் என்ற சந்தோஷம் அவர் மனதிற்குள் பெருக்கெடுத்து ஓடியது
சீரடிக்கு வந்த பிறகு நீ சிலை வாங்கிக்கொல் அதற்கு முன்னாடியே நான் உன் வீட்டிற்கு வந்து விடுகிறேன். என்று சொல்லாமல் சொல்லி சாய் அப்பா அவர் வீட்டுக்குள் வந்து அமர்ந்ததாக உணர்ந்தார், சுரேஷ் ராவின் குடும்பமே இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்..