செவ்வாய் தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றியும் செவ்வாய் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம் ஒருவேளை உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும் செவ்வாய் பகவானின் தாக்கம் அதிக அளவு இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு ஒரு நன்மைகள் அடைவதற்கு இந்த முறை உங்களுக்கு பயன்படுத்தும்.
செவ்வாய் தோஷம் நீங்க வழிபாடு
★ செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து அவருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி துவரை தானம் செய்தால் செவ்வாய் தோஷம் உங்களுக்கு நீங்கும் செவ்வாய் தோஷத்தின் உடைய தாக்கங்கள் குறையும் நல்ல வரன்கள் அமையும்.
★ செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது சஷ்டி விரதம் மற்றும் கிருத்திகை விரதம் மேற்கொள்வது தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பதும் நல்லது முக்கியமாக செவ்வாய் தோஷத்திற்கு மிக முக்கிய கடவுளாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான் அவரைவிட மிக முக்கியமானவர் முருகப்பெருமான் அதனால் நீங்கள் முருகப்பெருமானை விட வேண்டாம் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நல்லது நடக்கும்