செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் வீடு கட்டுவதற்கு உகந்த வணங்க வேண்டிய நாள்
செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிகவும் முக்கியமான ஒரு பிரதோஷமாக பார்க்கப்படுகிறது குறிப்பாக புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அத்தனைப் பெயரும் அல்லது புதிதாக இடம் வாங்கக்கூடிய எண்ணம் கொண்டவர்களும் சரி இந்த செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த எண்ணம் ஈடேறும்.
செவ்வாய்க்கிழமை பிரதோஷம் அன்று சிவபெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றால் பிரதோஷ நாளன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை பிரதோஷம் நேரம் என்று சொல்வார்கள் இந்த நேரத்தில் நீங்கள் சிவபெருமானுக்கு ஒரு அகல் விளக்கு ஏற்றி மனதார வேண்டிக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் வேண்டிய அத்தனை எண்ணங்களும் ஈடேறும் அதோடு சேர்த்து இந்த செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கு மிகவும் சக்தி வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது ஒருவர் வீடு கட்ட வேண்டும் இடம் வாங்க வேண்டும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானின் அருள் வேண்டும்.