செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது

செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு சிறப்பு வாய்ந்தது அந்த வகையில் செவ்வாய்க்கிழமை முருகரை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். பொதுவாக முருகரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது அதுவும் முருகருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபாடு செய்வது என்பது சகல நன்மைகளையும் ஒருவருக்கு வழங்கக்கூடிய வல்லமை அந்த நாளுக்கு உண்டு ஆதலால் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எப்படி முருகரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முருகரை எப்படி வழிபாடு செய்வது

செவ்வாய்க்கிழமை காலையில் குளித்து முடித்துவிட்டு காலைப் பொழுதில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய முருகர் கோவிலுக்கு சென்று அங்கு முருகருக்கு எதிரில் நெய் தீபம் ஏற்றி முருகரை மனதார வேண்டி முருகா போற்றி கந்தா போற்றி என்று சொல்லி உங்களுடைய வேண்டுதலை அவரிடம் வைத்து அவரை ஆறு முறை சுற்றிவர வேண்டும். ஒருவேளை முருகர் கோவில் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய முருகர் புகைப்படத்திற்கு முன் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

செவ்வாய்க்கிழமை முருகரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

★ செவ்வாய்க்கிழமை முருகரை வணங்குவதால் திருமண தடைகள் நீங்கும்.

★ செவ்வாய்க்கிழமை முருகரை வழிபாடு செய்வதால் வீடு மனை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் யோகங்கள் கிட்டும்.

★ தொழிலில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் லாபங்கள் பெற வேண்டும் என்றால் முருகரை வழிபாடு செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டும்.

★ வழக்குகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் முருகரை செவ்வாய்க்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

★ குழந்தை இல்லாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் குழந்தை கூடிய விரைவில் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

★ பிள்ளைகளுடைய படிப்பு மற்றும் கல்வி திறமை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை முருகரை வழிபாடு செய்ய வைப்பது சிறப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top