சீரடி சாய்பாபா உங்களுக்குள் எப்படி தோன்றுகிறார் உண்மை கதை | Shirdi Sai Baba Real Story in Tamil

சீரடி சாய்பாபா உங்களுக்குள் எப்படி தோன்றுகிறார் உண்மை கதை | Shirdi Sai Baba Real Story in Tamil :-
என்னுள் தோன்றிய ஞானஒளி :-
இந்தக் கடைசி எண்ணம் மிக அழுத்தத்துடன் தோன்றவே, எனது மனதுக்கு அவர் எவ்விதம் வெளியுலகைக் காண்கிறார் என்பது புலனாகத் தொடங்கியது. “எண்ணற்ற உருவங்களைக் கொண்ட இந்தப் பிரபஞ்சம் முழுதுமே, அவரது உணர்வு நிலையில் தோன்றும் ஒரு தோற்றமோ? அப்படியானால் நானும் அவரது மளநின் ஓர் எண்ணம்தானோ? இத்தகைய என் எண்ணங்கள் அதன் பல பகுதிகள்தானோ?” இந்த உள்ளுணர்வு உடனே என்னை எங்கோ வெகுதொலைவில் உள்ள நிலைக்கு எடுத்துச் சென்றது. எனக்கு வேறு எதுவுமே தெரியவில்லை. நான் அசைவற்று இருந்தேன். எனக்குள் ஒரு உள்ளொளி விளக்கம் ஏற்பட்டதைப் போன்ற உணர்வு இருந்தது. என் எண்ணங்கள் இருந்தும் இருந்தன. இந்த மொழிகள் மற்றவர்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம் என்பதை அறிவேன். தெரிவிக்க இயலாதவற்றை வார்த்தைகளில் வடித்தால், அவை பின் வேறு எப்படி இருக்க முடியும்?
காலம் என்ற உணர்வே அற்ற அந்த நிலையில், சிறிது நேரம் சென்றபின், என் தோள்களில் எவரோ பலமாக அடிப்பதைப் போல உணர்ந்து, என் சுயநிலைக்குத் திரும்பினேன். அப்போதுதான் நான் அமர்ந்திருப்பதையும், என் கண்கள் மூடியிருப்பதையும், பாதி உலர்ந்துபோன கண்ணீரால் எனது கன்ணங்கள் தளைத்தி ருப்பதையும் உணர்த்தேன், கோவிலில் ஒரே கூட்டமாகவும் சத்தமாகவும் இருந்தது. எனது தமையனார் என்னை லேசாகத் தட்டுவதைக் கண்டேன்.

அவர் ‘இன்னும் நீ இங்கேதான் அமர்த்திருக்கிறாயா? குளித்துக் காவைச் சிற்றுண்டி உண்டுவிட்டாயா? இப்போது பகலுணவு நேரம் வந்துவிட்டது. நமது பகலுணவை முடித்துக்கொள்வது நல்லது” என்று என்னிடம் கூறினார். அவரது சொற்கள் தெளிவாக எனக்குக் கேட்ட போதிலும், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திடீரென்று எழுப்பப் பட்டவளைப்போல அவற்றின் பொருள் எனக்கு விளங்க வில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே தொந்தரவாக இருந்தது. பதிலளிப்பது அதைக்காட்டிலும் சிரமமாக இருந்தது. அந்த ஆழ்ந்த அமைதி நிலையிலிருந்து என் ஆத்மா வெளியே வரமறுத்தது. அவர் சொல்வதன்படி நடப்பது மிகவும் சுலபமாக இருந்தது. நான் கோவிலுக்குள் நுழைந்து நான்குமணி நேரம் கழிந்துவிட்டிருந்தது! பகல் ஆரத்திக்காக மக்கள் கூடிக் கொண்டிருந்தனர். அபிலேகத்தை முடிப்பதற்காகப் பக்தர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். நாங்கள் சாப்பாட்டுக் கூடத்திற்குச் சென்றோம். எனக்கோ களவில் நடப்பதைப்போல் இருந்தது. எனது மனம் மீண்டும் அந்த ஆனந்தமும் அமைதியும் கலந்த நிலைக்கே திரும்பிச் சென்றுவிடத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நிலை இன்னும் முற்றும் கலையவில்லை. மற்றப் பொருள்களிலோ மனிதர்களிலோ கவனம் செலுத்துவது மிகவும் சிரமமாயிருந்தது.
இந்த மனோநிலை தொடர்ந்து நீடித்தது. ஷீரடியில் தங்கிய இரண்டு நாட்களிலும் அந் நிலை நீங்காமலே இருந்து. எனது தமையனார் எனக்கு வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். எனினும், உடனே நாங்கள் ஹைதராபாத்துக்குத் திரும்ப வேண்டுமென்று வற்புறுத்தினார். “உளக்கு வேண்டுமானால் மீண்டும் வரலாம். ஆனால், இப்போது நாம் போயே தீரவேண்டும்” என்றார். எனவே நாங்கள் வீடு திரும்பினோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top