சிவன் கோவிலுக்கு சென்றால் இந்த தவறை யாரும் செய்து விடாதீர்கள் என்ன தவறு என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
★ சிவன் கோவிலுக்கு சென்றான் சிவனை மட்டுமே வழிபட வேண்டும் அங்கு யார் காலிலும் விழக்கூடாது சிவனைத் தவிர அங்க பெரியவர்கள் யாரும் இல்லை.
★ மாமிசம் சாப்பிட்டுவிட்டு சிவன் கோவிலுக்குள் செல்லக்கூடாது ஒருவேளை மாமிசம் சாப்பிட்டு விட்டு சிவன் கோவிலுக்குள் சென்று விட்டாள் ஒன்றும் இல்லை சிவன் மன்னித்து விடுவார ( மாமிசத்தை வைத்து படையில் போட்டு சிவனை வழிபட்டவர் கண்ணப்பன் ).
★ சிவனுக்கு நேராக மண்டி போட்டு தரையில் முட்டி வணங்க கூடாது சிவன் கோவிலுக்கு வெளியில் கொடி மரத்தை அருகில் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
★ சிவனின் உடைய திருநீர் தரையில் சிந்தக்கூடாது முழுமையாக நெற்றியில் பூச வேண்டும் அல்லது நம் உடலில் படும்படி எங்கேனும் ஒரு இடத்தில் பூச வேண்டும்.