சிறுநீரக கற்களை அகற்றுவது எப்படி சிறுநீர் அடைப்பு தொடர்பான நோய்களை விளக்குவது எப்படி? வாழைத்தண்டு சாறு / Kidney Stones Natural treatment / Nattu Marunthu
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தருணத்தில் சரியாக நம் உடம்புகளை பாதுகாப்பதில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் நாம் இன்று அதிகமாக வெயிலில் சுற்றுகின்றோம் உடல் உழைப்பு போடுகின்றோம் ஆனால் சரியாக நம் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்துவது கிடையாது. இதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்றால் சிறுநீரக கற்கள் நம்முடைய கிட்னியில் உருவாகிவிடுகின்றன, அதாவது சிறுநீரக கல் அல்லது சிறுநீர் அடைப்பு தொடர்பான நோய்களுக்கு நாம் ஆளாகி விடுகின்றோம். இதை நாம் எப்படி எளிதாக நம்முடைய உணவின் மூலமாகவே சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
சிறுநீரக கற்களை அகற்ற மற்றும் சிறுநீர் அடைப்பை போக்குவதற்கான வாழைத்தண்டு சாறு:
வாழைத்தண்டு சாறு:
இந்த வாழை தண்டுச் சாறு நமக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்றால் முதலில் நம் வயிற்றில் இருக்கக்கூடிய சிறுநீரக கல் எதுவாக இருந்தாலும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அகற்றுவதற்கு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறுநீர் அடைப்பு தொடர்பான நோய்களை விளக்குவதில் வாழைத்தண்டு சாறு பெரிதும் உதவுகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அது மட்டுமில்லாமல் கை, கால், உடல் வலிகளை குறைக்கவும் இந்த வாழைத்தண்டு சாறு பயன்படுகிறது.
செய்முறை:
உங்கள் ஊரில் இருக்கக்கூடிய மார்க்கெட் என்று சொல்லப்படுகின்ற சந்தையில் வாழைத்தண்டு விற்பார்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து, வாரத்திற்கு மூன்று முறை அதாவது சிறுநீரக கல் சிறுநீர் அடைப்பு இருக்கக்கூடியவர்கள் வாரத்திற்கு மூன்று முறை அல்லது தினமும் ஒரு மாதத்திற்கு வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக எந்தவிதமான கல்லாக இருந்தாலும் எந்த சைஸில் கல் சிறுநீரகத்தில் இருந்தாலும் எளிதாக அது வெளிய அடித்து தள்ளி கொண்டு வந்து சேர்த்து விடும். ஒருவேளை உங்களால் வாழைத்தண்டு பொரியலாக சாப்பிட முடியாது என்றால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைக்கு சென்று வாழைத்தண்டு சாறு என்று கேட்டால் அவர்கள் டானிக் வடிவில் உங்களுக்கு கொடுப்பார்கள், அதை வாங்கிக் கொண்டு வந்து தினமும் காலை மாலை என்று ஒரு நாளைக்கு இரண்டு வேலை என்ற முறையில் ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உங்கள் கிட்னியில் இருக்கக்கூடிய எந்த விதமான கல்லாக இருந்தாலும் அடித்துக் கொண்டு வெளியே வரப்படும்.
குறிப்பு:
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் டானிக் வடிவில் வாழைத்தண்டு சாறு விற்கிறார்கள் அதை குடிப்பதை விட. இயற்கையான முறையில் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சந்தையில் வாங்கிக் கொண்டு வந்த வாழைத்தண்டு பொரியல் செய்து இயற்கையான முறையில் நீங்கள் சாப்பிட்டு வந்தால் டானிக் குடிப்பதின் இருக்கும் பலனை விட அதிகமாக உங்கள் உடலுக்கு அது இயற்கையாகவே கிடைக்கும். அதனால் முடிந்தவரை டானிக்கை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிடுவதால் நல்லவிதமான பலனை உங்களால் பெற முடியும்..