சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்

சித்திரகுப்தன் பிறந்தநாள் தான் சித்ரா பௌர்ணமி என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சித்ரா பௌர்ணமி மிகவும் முக்கியமான நாளாக சித்திர குப்தரை பார்க்கப்படுகிறது ஒவ்வொரு மக்களும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரின் வழிபாடு செய்வதால் உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்கும் அது என்ன என்பதை ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம்.

நம்முடைய பாவ கணக்கை பார்த்து எமதர்ம ராஜனிடம் சொல்லக்கூடியவர் சித்திரகுப்தன் இவரை மகிழ்விக்கும் நாளாக இந்த சித்ரா பௌர்ணமி பார்க்கப்படுகிறது இந்த சித்ரா பௌர்ணமி அன்று நாம் சித்திரகுப்தனை வழிபாடு செய்வதால் அவர் மகிழ்ந்து நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை பார்த்து நம்மீது கருணை பட்டு நம்மை வாழ்த்துவார் என்பது ஒரு ஐதீகம்.

சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக சித்ரகுப்தரை வழிபாடு செய்ய வேண்டும் அதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் வாருங்கள் சித்ரா பௌர்ணமி என்று சித்ரகுர்த்தனை வழிபாடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தன் வழிபாடு நன்மைகள்பி:-

★ சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தனை வழிபாடு செய்வதால் மழையளவு பாவம் கடுகளவு மாறும்.

★ கண்ணுக்குத் தெரியாமல் நாம் செய்த பாவங்கள் அதாவது இந்த உலகத்தில் வாழக்கூடிய பூச்சி வகைகள் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளாய் நம்மால் ஏற்பட்ட பாவம் நம் கண்ணுக்குத் தெரியாத பாவம் என்பார்கள் அதை போக்குவதற்கும் இந்த சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தன் வழிபாடு நமக்கு பாவங்களை நீக்கும் நாளாக பார்க்கப்படுகிறது.

★ புண்ணியத்தை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாவ கணக்கை முதலில் பார்க்கும் சித்திரகுப்தன் இந்த சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தனை வழிபாடு செய்வதால் நம்முடைய புண்ணிய கணக்கை அதிகரிக்கும் கண்ணுக்குத் தெரியாத பாவ கணக்கு இருந்தால் அதை நீக்கவும் இந்த நாள் நமக்கு உதவுகிறது.

★ சித்திரகுப்தன் வழிபாடு மிக முக்கியம் நம்முடைய வாழ்க்கையில் பூர்வ ஜென்ம புண்ணிய கணக்குகளை பார்த்து இப்போது நாம் வாழும் காலங்களில் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் உடைய நன்மைகளை நமக்கு கொடுக்க இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தன் வழிபாடு மிக முக்கியம்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து சித்ரகுப்தனை மாலை வேலையில் அவருடைய நினைவை மனதில் கொண்டு வீட்டில் லட்சுமி தேவியை விளக்கேற்றி மனமார சித்திரகுப்தன் வாழ்க என்று மூன்று முறை சொல்லி அவரை நினைத்து பூஜை அறையில் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும் பல நன்மைகளும் நடக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top