சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் சிறப்புகள் என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் என்ன சிறப்புக்கள் இருக்கிறது என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை தான் மிக முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது பல லட்சக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு கால் வைக்கவே இடமில்லாத அளவிற்கு கூட்டம் நெரிசலில் சிவபெருமான வழிபட வேண்டும் என்று மனதார அவர் பெயரை உச்சரித்து கிரிவலத்தில் ஈடுபடும் மக்கள் கண்டிப்பாக கிரிவலம் என்று அதுவும் சித்ரா பௌர்ணமி கிரிவளத்தன்று நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரிவலம் என்பது பார்வதி தேவி சிவபெருமானை அடைவதற்காக அவரை தலை முதல் பாதம் வரை சுற்றிவர வேண்டும் என்று சுற்றிய பாதையை தான் கிரிவலம் என்று அழைக்கப்பட்டு கிரிவலத் அன்று கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானை முழுமையாக சுற்றி வந்ததற்கு சமம் என்று ஒரு புராண கால கதை உண்டு. இதை மன்னர்கள் ஆட்சி காலத்திற்கு முன்னாடி இருந்தே கிரிவலம் பாதை கிரிவலம் சுற்றும் பழக்கம் நம் மண்ணில் இருந்தது.

அந்த வகையில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை யில் கிரிவலம் வருவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாயிற்று அந்த வகையில் சித்ரா பௌர்ணமி என்பது பல நன்மைகளை வாரி கொடுக்கும் நாளாக பார்க்கப்படுகிறது உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் வர வேண்டும் என்றால் இந்த சித்ரா பௌர்ணமியை நீங்கள் கண்டிப்பாக சிவபெருமான வழிபாடு செய்து ஆக வேண்டும். வாருங்கள் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வருவதால் கிடைக்கும் நன்மைகள் :-

★ சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்வதால் திருமண தடைகள் நீங்கி திருமணமாகாதவர்களுக்கு கூட நல்ல வரன் கிடைத்து திருமணமாகும் வாய்ப்புகள் உண்டு.

★ குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் கூட கண்டிப்பாக குலதெய்வமாக விளங்கக்கூடிய சிவபெருமானின் ஏதோ ஒரு அம்சமாகத்தான் இருக்கும் அதனால் குலதெய்வம் தெரியாதவர்கள் கூட சிவபெருமானை வழிபாடு செய்வதால் குலதெய்வ குற்றங்கள் நீங்கும்.

★ குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் கண்டிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

★ எது எடுத்தாலும் தடைகள் எது செய்தாலும் தடங்கல் இருந்து கொண்டே இருக்கிறது ஒரு நல்ல முன்னேற்றம் இல்லை கடவுளினுடைய அருள் எனக்கு கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி ஒரு பெரிய முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண முடியும்.

★ சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து சிவபெருமானின் வழிபாடு செய்தால் சந்திர பகவான், சித்திரகுப்தன் மற்றும் சிவபெருமான் ஆகிய மூவரின் உடைய அருள் கிடைக்கும்.

★ வீடு கட்ட முடியாதவர்கள் பணமிருந்தும் இடம் வாங்க முடியாதவர்களினுடைய தடைகளை நீக்க சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.

★ பார்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் என்றால் பார்வதி தேவி நடந்து வந்த கிரிவலப் பாதையில் நீங்கள் நடந்து வந்து சிவபெருமானை வழிபாடு செய்து அண்ணாமலையாருக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தாயாரையும் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் இரட்டிப்பான வளர்ச்சிகள் கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top