சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷம் என்பது மிகவும் முக்கியமான பிரதோஷமாக பார்க்கப்படுகிறது குறிப்பாக சிவபெருமான் சந்தோஷம் நிறைந்த காணப்படக்கூடிய நாள் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ நாள் என்று சொல்வார்கள்.
இந்த சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷ நாளன்று நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்வதா அதாவது பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் சகல நன்மைகளையும் சிவபெருமான் கொடுப்பார்.
கண்ணுக்குத் தெரியாத ஏகப்பட்ட தோஷங்கள் இருந்தாலும் இந்த சித்திரை மாத வளர்பிறை பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமான வழிபாடு செய்வதால் கண்ணுக்குத் தெரியாத பல தோஷங்கள் நீங்கி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் பெருகும் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும் இதில் எந்த மாற்றமும் வேண்டாம். சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷ பலன்கள் என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷ பலன்கள் :-
★ சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்வதால் தருதரம் தீரும் மற்றும் துரதஷ்டங்கள் நீங்கும் அதாவது தடைபட்ட காரியங்கள் எல்லாம் விலகும்.
★ வாழ்வில் வளர்ச்சிகள் இல்லை முன்னேற்றம் இல்லை என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு இந்த சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷம் என்பது மிக முக்கியமான பிரதோஷம் இந்த பிரதோஷம் அன்று நீங்கள் வழிபாடு செய்வதால் வாழ்வில் வளமை பெருகும் முன்னேற்றங்கள் அடிவீர்கள்.
★ நீண்ட நாள் திருமணம் நடக்காமல் தாமதமாகிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் கண்டிப்பாக சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று நீங்கள் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடி வரும்.