நாம் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடிய வேண்டும் என்றால் விநாயகரை வழிபாடு செய்து விட்டு ஒரு வேலையை செய்ய வேண்டும் முதல் முதற்கடவலாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமாறை சித்திரை மாத சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வணங்குவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
உலகத்தை சுற்றி வா உனக்கு ஞானப்பழம் கொடுக்கின்றேன் என்று சொல்லும்போது தாயையும் தந்தையும் சுற்றி சாதுரியமாக ஞானப்பழத்தை பெற்ற விநாயகரினுடைய அருள் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் வெற்றி சுலபமாக கிடைக்கும் அதனால்தான் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன் விநாயகரை வழிபாடு செய்து விட்டு செய்யுங்கள் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
அந்த வகையில் சித்திரை மாதத்தில் வருகின்ற சதுர்த்தி விரத பலன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
சித்திரை மாத சதுர்த்தி விரத பலன்கள் :-
★ சித்திரை மாத சதுர்த்தி என்று விரதம் இருந்து விநாயகர் வழிபாடு செய்வதால் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் மன அழுத்தங்கள் அகலும்.
★ கிரக தோஷங்கள் ஏதாவது கண்ணுக்கு தெரியாமல் இருந்தால் அது விலகுவதற்கு சித்திரை மாத சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதன் மூலமாக மாற்றங்கள் நிகழும்.
★ காரிய தடைகள் நீங்க வேண்டும் என்றால் சித்திரை மாதம் சதுர்த்தி மிகவும் உகந்தது அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
★ உடல்ரீதியாக நோய்களை அடிக்கடி அனுபவிக்க கூடியவர்கள் சித்திரை மாதம் சதுர்த்தி என்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்வதால் நோய்களிலிருந்து விடுபடலாம்.