சாய்பாபாவுக்கு விரதம் இருக்கலாமா.? Sai Baba Viratham Irukalama.? :-
சாய் பக்தர்களுக்கு ஒரு சில சந்தேகங்களிலும் அதில் ஒன்றாக இன்று இந்த பதிவில் பார்க்க போகின்றோம் நாம் சாயப்பாவுக்கு விரதம் இருக்கலாமா என்று சந்தேகம் அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக சாய் அப்பா வாழும் காலத்தில் எனக்கு இப்படி தான் பூஜை செய்ய வேண்டும் இந்த மாதிரி விரதம் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டளையும் விடவில்லை அவர் வாழும் காலங்களில் கூட அவர் இந்த உலகை விட்டு பிரியும் போது என்னை வந்து பார்க்கக்கூடிய அத்தனை பேரும் சாப்பிட்டு விட்டு என்னை வந்து பார்க்க வேண்டும் என்று சொன்னவர் சாய்பாபா.
அந்த வகையில் விரதம் கட்டாயம் வியாழக்கிழமை ஆனால் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் சாயப்ப சொல்லவில்லை.
வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு விரதம் இருக்கலாமா.?
1.வியாழக்கிழமை ஆனால் காலை முதல் மதியம் வரை விரதம் இருக்க விரும்பக் கூடியவர்கள் தாராளமாக விரதம் இருந்து காலை ஒரு பொழுதை உணவருந்தாமல் மதியம் இரவு உணவு அருந்தினால் சிறப்பானது.
2.வியாழக்கிழமை அன்று நீங்கள் விரதம் இருக்கும் போது சாய் அப்பாவை வணங்கிய அதே தருணம் வியாழக்கிழமைக்கு பேர் போன குரு பகவானே அதாவது தட்சிணாமூர்த்தி என்று சொல்லக்கூடிய குருவை நீங்கள் வணங்க வேண்டும் ஏனென்றால் குருவின் பார்வை கோடி நன்மை தரும் அதனால் உங்களுடைய குடும்பத்தினுடைய வளர்ச்சி உங்களுடைய வளர்ச்சி அதிகமாக இருக்கும்.