சனி பகவான் வழிபாடு முறை / சனிபகவானை எப்படி வழிபடுவது.? எப்படி வழிபட்டால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.!

சனி பகவான் வழிபாடு முறை / சனிபகவானை எப்படி வழிபடுவது.? எப்படி வழிபட்டால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.!

சனிப்பெயர்ச்சி காலங்களில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று சனி பகவானை வழிபடுவதன் மூலமாக நமக்கு பல சகல நன்மைகளையும் சனி பகவான் கொடுக்கலாம். சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை என்று சொல்வார்கள். அதற்கு காரணம் சனிபகவானை போல ஒருவருக்கு வாரி கொடுக்கக் கூடிய பகவான் இந்த உலகத்தில் இல்லை. அதேபோல செய்த கர்மாவிற்கு ஏற்ற பலனை கொடுக்கக்கூடிய பகவானும் இந்த உலகத்தில் இல்லை. அதுதான் சனி கொடுக்க எவர் தடுக்க என்று சொல்வார்கள் அந்த வகையில் சனிபகவான வழிபடும் முறை வழிபடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சனி பகவான் வழிபடும் முறை
  • சனி பகவானை வழிபட உகந்த நாள் சனிக்கிழமை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நீலவண்ண பூக்களால் மலர் கொண்டு படைக்க வேண்டும். அவருக்கு விளக்கேற்றும் முறை கருப்பு வஸ்திரம் கொண்ட திரியை எடுத்துக்கொண்டு நல்ல எண்ணையைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பை கொடுக்கும்.
  • சனி பகவானே வணங்கும்போது அவரது குருநாதரான பைரவரையும் நினைத்து வணங்குவது பல நன்மைகளை கொடுத்து அருள் புரியும் பைரவரும் சனிபகவானுக்கு சில அறிவுரைகளை கொடுத்து உன்னை வணங்க கூடியவர்களுக்கு சகல நன்மைகளையும் கொடு என்று அவர் நமக்காக வாதிடுவது போன்ற ஒரு ஐதீகம் உண்டு.
  • மெதுவாக நடந்து செல்லும் திறனுடைய சனி பகவானே அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வணங்க எத்தகைய பாதிப்புகளும் உங்களிடம் நெருங்காது அதாவது நவகிரக வழிபாடு மிகச்சிறந்தது என்பதை தான் இவ்வாறு சொல்கின்றோம்.
சனிபகவானை வணங்குவதால் நன்மைகள்
  • சனிபகவானை சனிப்பெயர்ச்சி காலங்களில் மட்டுமல்லாமல் பொதுவாக சனி தசா நடக்க கூடியவர்கள் சனி புத்தி நடக்க கூடியவர்கள் ஏழரை சனி கண்டக சனி அஷ்டம சனி நடக்க கூடியவர்கள் என்று சனியின் மேல் பிரியமுள்ள அதனை பேருமே சனி பகவானை சனிக்கிழமையில் வழிபடுவதன் மூலமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை காண முடியும்.
  • சனிபகவானை வணங்குவது தான் சனியினுடைய தாக்கம் மிக குறைவாகவே உங்களுக்கு இருக்கும் நீங்கள் செய்த கர்மாவுக்கு ஏற்ற கர்ம வினைகளின் உடைய பலன்களை அதனுடைய வீரியம் குறைவதற்கு நீங்கள் சனி பகவானே வணங்குவதன் மூலமாக நடக்கும்.
  • சனிபகவானை வணங்குவதன் மூலமாக கண்டிப்பாக தொழில் வளர்ச்சி பணவரவு மன நிம்மதி இப்படி பல வழிகளில் நன்மைகளை அவர் கொடுப்பார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *