தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும் போது ஒவ்வொருவரினுடைய மனதிலும் ஆனந்தமும் அன்பும் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் எந்தவித குழப்பமும் வேண்டாம். கேட்டு வரங்களை வாரி கொடுக்கும் சிவபெருமானின் உடைய பிரதோஷத்தைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷங்கள் வரும் அதில் மிக முக்கியமான பிரதோஷமாக கருதப்படுவது சனிக்கிழமை அன்று வரக்கூடிய சனிப்பிரதோஷம் இந்த சனி பிரதோஷம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த ஒரு பிரதோஷமாக பார்க்கப்படுகிறது
குறிப்பாக சனிப்பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமானுக்கு உங்கள் கையால் பால் அல்லது தயிர் வாங்கிக் கொடுத்தால் உங்களுடைய பாவங்கள் போக்கி உங்களுடைய கரும வினைகள் என்னுடைய அளவுகள் குறைக்கப்பட்டு சகல நன்மைகளும் உங்களுக்கு வாரி வழங்கக்கூடிய சக்தி வல்லமை நம் சிவபெருமானுக்கு நிச்சயம் உண்டு உங்களுடைய அத்தனை விஷயங்களும் அத்தனை தடங்கல்களும் தீர்வு என்பதில் எந்த விட சந்தேகமும் வேண்டாம்
சனி பிரதோஷம் அன்று நீங்கள் சிவன் ஆலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு நடத்தப்படும் பூஜைகள் கலந்து கொண்டால் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் எதுவாக இருந்தாலும் பனிபோல் விலகி உங்களுக்கு சகல நன்மைகளும் வாரி வழங்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
சனி பிரதோஷம் அன்று சாதத்தால் அலங்காரம் செய்வார்கள் அப்படி சாதத்தால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் முடிந்து அந்த பிரசாதம் அந்த சாதம் உங்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் அதை உண்ணும் போது உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சிகள் பெருக சகல சக்திகளும் உங்களை வந்து சேரும் உங்களுக்கு மனதில் இருக்கக்கூடிய அத்தனை எதிர்மறை எண்ணங்களும் பனிபோல் விலகி ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்
சனி பிரதோஷத்தை வணங்குவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்
1. கண்ணுக்குத் தெரியாத எந்த விதமான தோஷங்கள் இருந்தாலும் கண்டிப்பாக விளங்கிவிடும்.
2. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்
3. தொழிலில் வளர்ச்சி இல்லாதவர்கள் கூட இந்த சனிப்பிரதோஷம் அன்று கலந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடைந்து சகல லாபங்களையும் பெறுவார்கள்.
4. சனிப்பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமானுக்கு விளக்கு ஏற்றினால் நிச்சயமாக வேளையில் தடங்கள் இருக்கக்கூடியவர்கள் கூட தடங்கல் நீங்கி சுபிட்சம் பெற்று உங்களுக்கு வேலை கிடைக்கும்
5. வீடு கட்ட வேண்டும் என்று எண்ணமிருந்து கட்டுவதற்கு தடங்கள் ஏற்படுகின்ற அத்தனை பேருக்கும் இது சனிப்பிரதோஷம் ஒரு வரப் பிரசாதம் சனி பிரதோஷம் என்று நீங்கள் அவரை சுற்றி வந்து மனதார வேண்டுவதன் மூலமாகவே வீட்டு கட்டுவதற்கான தடைகள் இருந்தாலும் தடங்கல்கள் இருந்தாலும் நிவர்த்தி அடையும்
6. திருமணம் நடக்காதவர்கள் நடக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வலம் வந்து மனதார வேண்டி அவருக்காக விளக்கேற்றி வந்தான் நிச்சயமாக திருமண தடைகள் நீங்கி உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல வரன் அமைய உறுதுணையாக இருக்கும்
இப்படி சனிப்பிரதோஷம் பல சகல நன்மைகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அதனால் தான் ஒவ்வொரு பக்தர்களும் இந்த சனி பிரதோஷத்தில் கலந்து கொண்டால் பத்து ஆண்டுகள் சிவபெருமானை வணங்காத இருக்கும் பாவங்கள் கூட நீங்கி இந்த ஒரே ஒரு சனி பிரதோஷம் உங்களுக்கு பலனை வாரி கொடுக்கும் அதாவது 10 ஆண்டுகளாக சிவபெருமானை வணங்கக்கூடிய பலன் இந்த ஒரு நாள் சிவபெருமானை வணங்கினால் உங்களுக்கு கிடைக்கும் என்பதுதான் உண்மை
இந்த சனி பிரதோஷம் எப்போது ஆரம்பிக்கும் என்று பார்த்தால்
சனிப்பிரதோஷம் எப்போதும் சூரியன் மறைவதற்கு முன் 20 நிமிடம் மறைந்த பிறகு 20 நிமிடம் என்று மொத்தம் 40 நிமிடங்கள் நீடிக்கும் இந்த 40 நிமிடம் சிவபெருமானுக்கு ஆரத்திகளும் சாதத்தால் அலங்காரங்களும் ஆராதனைகளும் செய்து சிவபெருமானை வழிபடுவார்கள் ஏராளமான பக்தர்கள் இந்த சனி பிரதோஷத்தில் கலந்து கொள்வார்கள் அதில் நீங்களும் ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை
மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் சனிப்பிரதோஷம் அன்று நீங்கள் சிவபெருமானை வணங்கினால் 10 ஆண்டுகள் சிவபெருமானை வணங்கியதற்கு சமம் என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொரு மாதமும் வருகின்ற பிரதோஷத்தில் கலந்து கொள்ளுங்கள் குறிப்பாக சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு செல்வதில் எந்தவித தாமதமும் இல்லாமல் தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு சாயின் பிள்ளைகளும் கலந்துகொண்டு ஈசனுடைய அருளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்