கோவில் என்றால் என்ன கோவிலில் கடவுள் எதனால் உருவாக்கப்பட்டது என்பது பற்றி பல சந்தேகங்கள் பல பேருக்கு இருக்கும் அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் கோவில் எப்படி உருவானது கோவிலில் இருக்கக்கூடிய கடவுள் எதனால் உருவாக்கப்பட்டது என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கோவில் உருவானது மற்றும் கோவிலுக்குள் கடவுள் உருவானதற்கான காரணங்கள் பால இருந்தாலும் அதில் ஒரு காரணத்தை பற்றி நாம் இன்று பார்க்கலாம்.
மனவளியால் தவிக்க கூடிய மக்கள் தன்னுடைய மனதில் இருக்கக்கூடிய வழிகளை போக்குவதற்கு என்ன செய்வது என்று குழம்பிப் போயிருக்கும் போது நம் தமிழ் சமூகத்தை சேர்ந்த குருமார்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார்கள் அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடவுள் உருவாக்கப்பட்ட அந்த நேரம்.
ஒரு மனிதன் மிகவும் குழம்பி போய் இருக்கின்றான் தன்னுடைய சக நண்பர்களிடமோ அல்லது சக உறவுகளிடமோ தன் மனதில் இருக்கக்கூடிய வேதனைகளை சொல்கின்றான் ஒருநாள் சொல்லும்போது நம்முடைய உறவுகள் கேட்பார்கள் இரண்டு நாள் சொல்லும்போது நம்முடைய உறவுகள் கேட்பார்கள் மூன்று நாள் சொல்லும்போது நம்முடைய உறவுகள் கேட்பார்கள். ஆனால் அதற்கு மேல் நாம் சொல்லக்கூடிய நம்முடைய வழிகளையும் வேதனைகளையும் கேட்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. இன்னும் சொல்ல போக வேண்டும் என்றால் நம்மை பார்த்தாலே ஓடி ஒழியக்கூடிய நிலைமை உண்டாகிவிடும்.
அப்போ நம் முன்னோர்கள் யோசிக்கின்றார்கள் ஒரு மனிதன் மனரீதியான தொந்தரவு மிகவும் ஏற்பட்டு அவஸ்தை படுகின்றான் அவன் மனரீதியிலிருந்து மன வழியில் இருந்து வெளிவர வேண்டும் என்ன செய்வது என்று யோசிக்கும் போது மனிதர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நம்முடைய வழிகளை சொல்ல முடியாது சொன்னாலும் கேட்பதற்கு நேரம் இருக்காது அப்போ நம்முடைய வழிகளை இன்னொருவரிடம் சொல்லும்போது நமக்கு உளவியல் ரீதியாக வழிகள் குறைக்கப்படுகிறது அப்போ என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து ஒரு கடவுள் என்று ஒருவரை உருவாக்குகிறார்கள்.
அப்படி கடவுள் என்ற ஒருவரை உருவாக்கும் போது அதை சிலை வடிவில் மனித ரூபத்தில் வடிக்கிறார்கள் அந்த ரூபத்திடம் போய் நாம் நம்முடைய வழிகளை சொல்லும்போது அது திரும்ப நமக்கு எந்தவித ஆறுதலும் சொல்லாது எந்த வித கோபப்படாது அப்போ 365 நாட்களும் நம்முடைய வழிகளை நாம் அந்த உருவத்திடம் சொல்லும்போது உளவியல் ரீதியாக நம் மனதில் இருக்கக்கூடிய வலிகளும் வேதனைகளும் குறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. அதன் பிறகு அந்த உருவத்திற்கு கடவுள் என்று ஒரு பெயர் வைக்கிறார்கள் நம்முடைய வழிகளை போக்கக்கூடிய கடவுளாக இன்றும் இந்த நாளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனரீதியான மன அழுத்தத்தில் இருந்து ஒரு மனிதனை வெளிக்கொண்டு வருவதற்காக தான் கடவுள் என்ற ஒரு விஷயத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள் பகுத்தறிவின் மிகப்பெரிய பகலவன்களாக நம் முன்னோர்கள் திகழ்ந்ததற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி.