அனைவரும் மனம் ரீதியான தொந்தரவுகள் அல்லது வலிகளும் வேதனைகளும் அனுபவிக்கும் போது கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொதுவாக சந்தோஷமாக இருக்கும் நேரத்தை விட வலியும் வேதனையும் அதிகமாக இருக்கும் போது கடவுளினுடைய ஞாபகம் நமக்கு வரும் அந்த வகையில் கோவிலுக்கு நான் போகும்போது என்ன செய்ய வேண்டும் மற்றும் கோவிலுக்கு போன பிறகு கோவிலுக்குள் நாம் என்ன விஷயங்கள் எல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கோவிலுக்கு போகும்போது என்ன செய்ய வேண்டும்
முதலில் கோவிலுக்கு உள் போவதற்கு முன் நீங்கள் தானங்களை செய்யலாம் கோவிலுக்கு உள் போவதற்கு முன் பல பேருக்கு நீங்கள் தானம் செய்யலாம் பணம் கொடுக்கலாம் அல்லது உதவி செய்யலாம் ஏதாவது ஒரு விஷயம் செய்வதாக இருந்தால் கோவிலுக்கு உள் போவதற்கு முன் நீங்கள் செய்யலாம்.
கோவிலுக்கு உள் நீங்கள் போவதற்கு முன் முதலில் கோபுரத்தை வணங்க வேண்டும் கோபுர தரிசனம் கோடி தரிசனம் ஆகும் ஒரு கோபுரத்தை வணங்குவது என்பது அந்த கோவிலுக்குள் இருக்கக்கூடிய அத்தனை கடவுள்களையும் சேர்த்து வணங்குவதற்கு சமம் அதனால் முதலில் கோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே செல்ல வேண்டும்.
கோவிலுக்கு உள் போன பிறகு நீங்கள் கடவுளிடம் மன்றாடி கேட்கும் போது உங்களைப் பற்றி மட்டும் தான் நீங்கள் சிந்திக்க வேண்டும் கோவிலுக்குள் நீங்கள் உங்களுடைய வளர்ச்சிகளை பற்றி மட்டும்தான் பேச வேண்டும் அடுத்தவர்களை பற்றி கோவிலுக்குள் எப்போதும் பேசக்கூடாது அடுத்தவர்களுக்கு எப்போதும் சாபம் விடக்கூடாது கோவிலுக்குள் முழுக்க முழுக்க உங்களை பற்றி மட்டுமே நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
ஏன் கோவிலுக்குள் அடுத்தவர்களை பற்றி பேசக்கூடாது என்றால் கோவிலுக்குள் நாம் அடுத்தவர்களை பற்றி பேசும்போது அங்கு இருக்கக்கூடிய சித்தர்கள் அப்படியே ஆகட்டும் என்று சொல்வார் அப்போ நாம் அடுத்தவர்களை பற்றி நல்லதாக பேசினால் பரவாயில்லை அல்லது அவர்களுக்கு சாபம் விடும் போது ஏதாவது நாம் பேசிக் கொண்டிருந்தால் நம்முடைய சித்தர்கள் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வாதம் செய்யும்போது அவர்களுக்கு பல கெடுதல் நேரிடும் இதனால் நமக்கு என்ன பலன் என்றால் கெட்ட கருமா நம்மை சேரும் அதனால் கோவிலுக்கு போகும் போது இந்த மாதிரியான விஷயங்களை நாம் செய்யக்கூடாது.
முடிந்தால் கோவிலுக்கு போன பிறகு கோவிலுக்குள் விக்ரகம் இருக்கும் அல்லவா அந்த விக்கிரகத்திற்கு உங்கள் கையால் பால் ஊற்றும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் சிறப்பானது ஏன்னா கோவிலில் விக்கிரகத்தின் மீது பால் ஊற்றுவது என்பது நம்முடைய பாவத்தை கழுவுவதற்கு சமம் இந்த ஒரு விஷயம் கிடைத்தால் மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழும்.
கோவிலுக்குள் செய்யக்கூடாத விஷயம் என்ன
கோவிலுக்குள் நாம் கண்டிப்பாக செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன அதில் முதலில் நாம் பார்க்கக்கூடியது கோவிலுக்குள் சத்தம் போட்டு பேசக்கூடாது.
கோவிலுக்குள் செல்லும் போது கடவுள் அனைவரையும் வணங்கி விட்டு வெளியில் வரும்போது நாம் தானம் செய்யக்கூடாது என நம்ம கடவுளிடம் பிச்சை கேட்டு வரமாக வாங்கிட்டு வரும் அதை நாம் வெளிய வந்து இன்னொருவரிடம் தானம் செய்வதாக மாறிவிடும். அதனால் கோவிலுக்குள் சென்று கடவுளை வணங்கி விட்டு வெளியில் வரும்போது யாருக்கும் தானம் செய்யக்கூடாது கோவிலில் இருந்து நேரடியாக நீங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். வேறு யார் வீட்டுக்கும் செல்லக்கூடாது.
கோவிலுக்கு உள் அமர்ந்து யாரையும் சபிக்க கூடாது யாரையும் திட்டக்கூடாது யாரைப் பற்றியும் பேசக்கூடாது என அதி தேவதைகள் கோயிலுக்குள் வசித்துக் கொண்டிருப்பார்கள் நீங்கள் ஒருவரை சாபமிடும்போது அல்லது ஒருவரை பற்றி திட்டும்போது அப்படியே ஆகட்டும் என்று சபித்து விடுவார்கள் அல்லது வாழ்த்தி விடுவார்கள் அப்படி செய்யும்போது அவர்களுக்கு நம்மால் ஏற்படுகின்ற வினையால் அவர்களுடைய கருமா நம்மை வந்து சேரும் இதனால் நாம் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும் அதனால் கோவிலுக்குள் செல்லும்போது நம்மைப் பற்றி மட்டும்தான் நாம் சிந்திக்க வேண்டும் தவிர அடுத்தவர்களை பற்றி எப்போதும் பேசக்கூடாது.