கோயிலில் கடவுளுக்கு அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்யும் போது தமது பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லித்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? சாமி பெயருக்குப் பண்ணலாமா?
நமது பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் சொல்லி எனது இன்ன இன்ன குறைகள் தீரவும், எல்லாவிதமான நன்மைகளும் நடைபெறவும் நான் உன்னை வழிபடுகிறேன் என்று ஒரு மத்திரத்தைச் சொல்லி நமது சார்பாக அர்ச்சகர் பூஜை செய்வார். இதைச் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தல் என்று சொல்வார்கள். இதைக் காம்யார்த்த பக்தி என்று கூறுவதுண்டு. எந்த வேண்டுகோளும் இன்றி உலக நன்மைக் காக ஆலய வழிபாடு செய்வதை நிஷ்காம்ய பக்தி என்பார்கள். இந்த இரண்டாவது வகையைத்தான் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்துவிடுங்கள் என்று சொல்கிறோம். எப்படிச் செய்தாலும் சாமி பெய ருக்குத்தான் அர்ச்சனை செய்வார்கள். ரமேஷ் முனுசாமியே நம என்று யாரும் உங்கள் பெயருக்குப் பூஜை செய்யப் போவதில்லை. தங்களின் ராசி நட்சத்திரம் போன்ற விவரங்கள் தெரியாதவர்களும் எந்த வேண்டு கோளும் இன்றி வழிபாடு செய்பவர்களும் சாமி பெயருக்கு என்று சொல் லிவிடுவது வழக்கம். உங்களின் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் சொல்லி சங்கல்பம் செய்து உங்களுடைய தேவைகளை மனத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு கோயிலில் அர்ச்சனை செய்ய லாம். அதில் தவறே இல்லை.
இந்த தகவலை நீங்கள் படிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் கண்டிப்பாக பலருக்கும் பகிருங்கள் அவர்களும் இதை தெரிந்து கொள்ளட்டும்