இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு இருமல் ஏற்படும்போது அந்த குழந்தையினுடைய இருமலை எப்படி நாம் சரி செய்வது என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொரு தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் அந்த வகையில் நம் அழகான நாட்டு மருத்துவம் சொல்லிக் கொடுத்த ஒரு அற்புதத்தை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
இன்று மருத்துவரிடம் நீங்கள் உங்கள் குழந்தையை கொண்டு போய் காண்பிக்கும் போது அந்த குழந்தைக்கு இருமல் நிக்காமல் வந்து கொண்டிருந்தால் மருத்துவர் சொல்வார். கண்டிப்பாக நீங்கள் தேன் அந்த குழந்தைக்கு கொடுங்கள் என்பார் அந்த அளவுக்கு தேன் முக்கியத்துவம் வாய்ந்தது.
மூலப்பொருள்:-
தேன் என்ன செய்யும் என்றால் தொண்டையில் இருக்கக்கூடிய புண்களை குணப்படுத்த மிகப்பெரிய அருமருந்தாக அந்த தேன் விளங்குகிறது. அதனால் குழந்தைகள் தூங்குவதற்கு முன் ஒரு அரை டம்ளர் தண்ணீரில் தேனை கலந்து குடிக்க செய்து தூங்க வைத்தால் தொண்டையில் இருக்கக்கூடிய புண் ஆறி இரும்பல் குணமாகும்.