குலதெய்வத்தின் நன்மைகளை இன்று இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம
குல தெய்வத்தின் வழிபாடு என்பது கோடி வழிபாடு என்பார்கள். குலதெய்வத்தை வணங்காமல் எந்த ஒரு கடவுளை வணங்கினாலும் அதனுடைய பலன் நமக்கு பூரணமாக கிடைக்காது
அதனால்தான் நம் முன்னோர்கள் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தன்னுடைய குல தெய்வத்தை வணங்கி விட்டு அந்த காரியத்தை செய்தார் இதனால் குலதெய்வத்தின் உடைய அருளைப் பெற்று அவர்கள் செய்யும் காரியத்தில் வெற்றிகள் அடைந்தார்கள்
குலதெய்வம் என்பது யார்
குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் நமக்காக நம் குடும்பத்திற்காக உழைத்து நம் குடும்பத்தை வாழையடி வாழையாக நல்ல விதமாக வளர்த்தவர்களை போற்றும் வகையில் நாம் நம் குலத்திற்காக பாடுபட்ட அந்த தெய்வங்களை வணங்குவதே குலதெய்வம் ஆகும்
குலதெய்வத்தின் நன்மைகள்
1. குலதெய்வத்தை வணங்குவதால் நமக்கு கோடி நன்மைகள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு முன் நம் குல தெய்வத்திடம் சொல்லிவிட்டு செய்யும் பழக்கத்தை வழக்கமாக கொள்ளவேண்டும். இதனால் நன்மைகள் நடக்கும் என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஐதீகம
2. குலதெய்வத்தை வணங்குவதால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது உண்மை
3. ஒரு ஜோசியரிடம் போய் அடிஅடிக்க எனக்கு கஷ்டம் வருகிறது என்று சொன்னால், உங்கள் குலதெய்வத்தை நீங்கள் கடைசியாக எப்போது வேண்டிக்கொண்டீர்கள் என்று நம்மை கேட்பார்கள். காரணம் குலதெய்வம் அருள் நமக்கு இருந்தால் நம் குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷங்கள் பெருகும் என்பது சாஸ்திரம்
4. குலதெய்வத்தை வணங்குவது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்