குலதெய்வ வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் / Kuladheivam Nanmaikal / Kuladheivam Benefits in Tamil
ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு என்பது கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும் வருடம் முழுவதும் குலதெய்வத்தை வணங்க முடியாதவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக குலதெய்வத்திற்கு பூஜை செய்து அவர்களை வழிபாடு செய்ய வேண்டும்.
குலதெய்வத்தை வணங்காமல் ஆயிரம் கடவுளை வணங்கினாலும் அதனுடைய பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்காது ஏனென்றால் குலதெய்வ வழிபாடு கோடி வழிபாடு என்பார்கள் ஒவ்வொரு நண்பர்களும் ஆண்டிற்கு ஒரு முறையாவது குல தெய்வத்தை கட்டாயம் வணங்க வேண்டும்.
நன்மைகள்
1. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் குலதெய்வத்திடம் சொல்லிவிட்டு செய்தால் கண்டிப்பாக நீங்கள் செய்யும் காரியம் மிகப்பெரிய பலனை பெற முடியும்.
2. குழந்தை இல்லாதவர்கள் குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தால் கண்டிப்பாக எண்ணி ஒரு வருடத்திற்குள் குழந்தை வரம் கிடைக்கும்.
3. குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருந்தால், குலதெய்வ குத்தம் என்று ஒன்று இருக்கும் அதனால் குலதெய்வத்தை குடும்பத்தோடு போய் வணங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து சண்டைகள் விலகி நல்ல செல்வாக்கு பேர் புகழ் அந்தஸ்து கிடைக்கும்.
4. குழந்தை பிறந்தவுடன் முதலில் குலதெய்வ காணிக்கை செலுத்த வேண்டும் குலதெய்வத்திற்கு முடி எடுக்க வேண்டும் இது அந்த குழந்தையினுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
குலதெய்வ வழிபாடு கோடி வழிபாடு என்பார்கள் அதை நீங்கள் மட்டும் பின் தொடர்ந்தால் போதாது உங்களுடைய பிள்ளைகளுக்கும் அதை சொல்லித் தர வேண்டும் உங்களுடைய குலதெய்வம் என்ன என்பதை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே அதனுடைய அருமை பெருமை தெரியும் ஏனென்றால் குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.