குரு பெயர்ச்சி என்றால் என்ன.? குரு பெயர்ச்சி முழு விளக்கம்.? guru peyarchi endral enna.?

குரு பெயர்ச்சி என்றால் என்ன குரு பெயர்ச்சியின் முழு விளக்கம் கட்டாயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். guru peyarchi endral enna.?

குருபெயர்ச்சி – விளக்கம்

நவக்ரகங்களில் குருவுக்கு மட்டும் தான் பொன்னவன் என்று பெயர். குருபகவான் ஒரு முழுமையான சுபகிரகம். எந்த ராசியில் இருந்தாலும் ஓரளவு நன்மையையே செய்யக் கூடியவர். குருபார்க்க கோடி நன்மை. குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி என்பர். குருபகவானின் 5, 7, 9 இடப் பார்வைகள் மிக விசேஷமானது என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. குரு 2,5,7,9,11 இடங்களில் இருக்கும் போது அளவற்ற நற்பலன்களையும் யோகங்களையும் தருகிறார். 1. 4. 7. 10 ஸ்தானங்களில் இருக்கையில் கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கி கொடுக்கவும் செய்வார். இந்த கேந்திர ஸ்தானங்களில் குரு இருக்கும் போது குரு மங்கள யோகம் ஏற்பட்டு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது. குரு பகவான் 3. 4, 6, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும் போது அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது. இதற்கு உதாரணம் ஒரு பாடல்

ஜென்மராமர் வனத்திலே சிறை வைத்ததும் தீதயே குரு மூன்றில் துரியோதனன் படை மாண்டதும் இன்மை எட்டிலே வாலி பட்டமிழந்து போம்படியானதும் ஈசனார் ஒரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும் தன்மபுத்திரர் நாலிலே வனவாசம் படிப்போனதும் சத்யா மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும் வன்மையாற்றிட ராவணன் முடி பன்னிரண்டிலே வீழ்ந்ததும் மன்னுமாகுரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பதுவே. குரு மாறினால் குதூகலம் ஏற்படும் என்பது வழக்கு.

குரு மூல மந்த்ரம்

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ் பதயே நம

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top