குரு பூர்ணிமா என்றால் என்ன.? குரூப் பூர்ணிமா என்று பெயர் வர காரணம் என்ன.? சாய் அப்பாவை குரு பூர்ணிமா கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன.? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம். பொதுவாக குரு பூர்ணிமா ஆனி மாதம் வருகின்ற பௌர்ணமியை குரூப் பூர்ணிமா என்று அழைப்பார்கள். அதாவது ஆன்மீக குருவாக இருந்தாலும் சரி நமக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆசான் என்று அழைக்கப்படுகின்ற குருவாக இருந்தாலும் சரி அல்லது நம் பெற்றோர்களாக இருந்தாலும் சரி யார் நமக்கு எதை சொல்லிக் கொடுக்கின்றார்களோ அவர்கள் நமக்கு குரு அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இந்த குருபூர்ணிமா அமைகிறது.

குரு பூர்ணிமா என்று பெயர் வர காரணம்
சிவபெருமான் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அப்போது அவரைப் பார்க்க ஒரு ஐந்து சீடர்கள் வருகிறார்கள் சிவபெருமானை அழைக்கின்றார்கள் சிவபெருமான் மெதுவாக கண்களைத் திறந்து அந்த சீடர்கள் ஐந்து பேரை பார்க்கிறார்கள். அவர் பார்க்கும் போது சீடர்கள் கேட்கின்றார்கள் நான் உங்களிடம் பாடத்தை கற்றுக் கொள்ள அதாவது ஆன்மீகத்தை கற்றுக் கொள்ள வந்திருக்கின்றேன் ஞானத்தை நீங்கள் எனக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் பேசுவதை கேட்டவுடன் சிவபெருமான் இரண்டு கண்களையும் மூடி கொள்கின்றார் பிறகு 85 ஆண்டுகள் கழித்து அவர் கண்களைத் திறந்து பார்க்கின்றார் அந்த ஐந்து சீடர்களும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் சிவபெருமானுக்காக முதலில் ஆன்மீக சக்தியை பெறுவதற்கு பொறுமை மிக மிக அவசியம் என்று முதல் தத்துவத்தை அந்த சீடர்களுக்கு எடுத்துரைத்தார் சிவபெருமான். பிறகு ஞான ஒளியை அந்த சீடர்களுக்கு சிவபெருமான் வழங்கினார் அந்த நாளை ஆனி மாதம் வருகின்ற பௌர்ணமி அன்று சிவபெருமான் 85 ஆண்டுகள் கழித்து கண்களைத் திறந்த அந்த நாள் குரு பூர்ணிமா என்று அழைக்கப்பட்டது.
சாய்பாபாவுக்கு எப்படி குரூப் பூர்ணிமா மிக முக்கியமான நாளாக கருதப்பெற்றது
1909 ஆம் ஆண்டு அணி பௌர்ணமி நாள் சாய்பாபாவை பார்க்க துல்கர் அவர்கள் வருகிறார் அந்த நாள் ஆனி மாதம் பௌர்ணமி அன்று சாய்பாபாவிடம் துல்கர் கேட்கின்றார் இன்று குரு பூர்ணிமா உங்களை குருவாக நாங்கள் தத்தெடுத்து உங்களை வணங்க வேண்டும் என்று கேட்கிறார். உடனடியாக சாய்பாபா சொல்கிறார் இந்த தூணை நீங்கள் குருவாக ஏற்றுக் கொண்டு கொண்டாடுங்கள் நான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார் ஆனால் துல்கரும் அந்த ஊர் மக்களும் விடாமல் சாய்பாபாவிடம் பேசி அன்று நீங்கள் நிச்சயமாக எங்களுக்கு குருவாக மாற வேண்டும் என்று கேட்டு அவரும் ஏற்றுக்கொண்டு நமக்கு குருவாக மாறினார். அந்த நாள் 1909 ஆம் அண்டு வந்த ஆனி மாதத்தில் பௌர்ணமி அன்று சாய்பாபா நமக்கு குருவாக ஏற்றுக் கொண்ட நாள் அதனால் தான் குருபூர்ணிமா சாய்பாபாவுக்கு உகந்த நாளாக நாம் பார்க்கின்றோம்.
சாய்பாபாவுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொண்டு. குரு பூர்ணிமா என்று நாம் கடைப்பிடிக்க வேண்டும், குரு பூர்ணிமா அன்று மட்டும் சாய்பாபாவுக்கு பிடித்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டுமா என்றால் இல்லை அந்த ஆண்டு முழுவதும் நாம் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும்.
குறிப்பாக சச்சரிதம் படித்தல் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை படித்தல் அல்லது ஆடியோவில் போட்டு விஷ்ணு சஹஸ்ர நாமத்தை காதுகளில் வழியாக கேக்குதல் போன்ற விஷயங்களை நாம் செய்யலாம் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம் இது சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் அப்படி இல்லை என்றால் சாய்பாபாவின் புகைப்படத்தை வாங்கி நான்கு பேருக்கும் ஐந்து பேருக்கும் நம்மால் முடிந்த அளவுக்கு கொடுக்கலாம் அல்லது சாய்பாபாவின் சிலை வாங்கி நம்மால் முடிந்த அளவுக்கு நாம் கொடுக்கலாம்.
நிச்சயமாக இந்த பதிவில் குருபூர்ணிமா என்றால் என்ன குரூப் பூர்ணிமா எப்படி உருவானது என்பதை பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்களும் இந்த குரூப் பூர்ணிமா அன்று உங்கள் குருவை வணங்குங்கள் முடிந்தால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய சாய்பாபா கோவிலில் நிச்சயமாக குருபூர்ணிமா பூஜை நடக்கும் அதில் நீங்கள் கலந்து கொண்டு குருவினுடைய ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்று மகிழ்ச்சியோடு இருங்கள்.