குடும்ப கஷ்டம், தொழில் கஷ்டம், மன கஷ்டம் தீர, இவரை வணங்கினால் போதும் வாழ்க்கை மாறும் இது சத்யம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வராமல், குடும்பத்தை நடத்த, தொழிலை செய்ய, ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் நமக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளைப் பற்றி தான் இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு குருவினுடைய பார்வை மிக மிக முக்கியம் அந்த வகையில் நமக்கு எந்த பலன் நடந்து கொண்டிருந்தாலும் குருவின் பார்வை நமக்கு இருந்தால் நாம் செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி என்பது நிச்சயம்.
பரிகாரம்
ஆலங்குடியில் இருக்கக்கூடிய விநாயகர் கோவில் அந்த விநாயகர் கோவிலில் உள்ளே இருக்கக்கூடிய குருபகவான். இந்த குரு பகவானை வணங்கிவிட்டு அந்தக் கோவிலை 25 முறை சுற்றி வந்தால் நிச்சயமாக குடும்ப கஷ்டம் மனக்கஷ்டம் தொழில் கஷ்டம் திருமணம் தடை அத்தனையும் நீங்கி மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் காண முடியும்
செய்யவேண்டியவை
முதலில் கோவிலில் இருக்கக்கூடிய கடவுள்களை வணங்கி விட்டு குறிப்பாக குருவிற்கு தனியாக அபிஷேக பூஜை செய்துவிட்டு பிறகு கோவிலை சுற்றி வர வேண்டும், 3 முறை அல்லது 6 முறை அல்லது 12 முறை அல்லது 15 முறை அல்லது 25 முறை குரு கோவிலை சுற்றிவர உங்கள் வேண்டுதல் பலிக்கும் என்பது ஐதீகம்.
காரணம்
நம்முடைய ஜாதகத்தில் குருவினுடைய பார்வை நமக்கு இல்லாமல் இருக்கும்போது நாம் செய்யக்கூடிய அத்தனை முயற்சிகளிலும் நமக்கு வெற்றி என்பது தடைபட்டுக் கொண்டே இருக்கும், இங்குதான் இந்த ஆலங்குடி குரு கோவில் நமக்கு பலமாக நிற்கின்றன இந்த கோவிலை நாம் வணங்கிவர நம்முடைய அத்தனை கஷ்டங்களும் குரு பலனால் நமக்கு தடைப்பட்ட அத்தனை பாதிப்புகளும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.