கால பைரவரை வழிபாடு செய்வது எப்படி மற்றும் எத்தனை தீபம் ஏற்றி கால பைரவரை வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும் :-
கால பைரவரை வழிபாடு செய்வது நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றங்களையும் நோய் நொடிகளையும் மற்றும் பில்லி சூனியங்களையும் நம்மிடமிருந்து விலைக்கு வைப்பதற்கு கால பைரவர் மிகவும் உறுதுணையாக இருக்கின்றார் அந்த வகையில் கால பைரவரை எப்போது வழிபாடு செய்ய வேண்டும் எத்தனை தீபங்களை ஏற்று வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கால பைரவரை எப்போது வழிபாடு செய்ய வேண்டும்
கால பைரவரை எப்போதும் ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது சிறப்பானது அது மட்டுமல்லாமல் அஷ்டமி தினத்தன்று கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது அஷ்டமி நாட்களில் உங்களால் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
கால பைரவருக்கு எத்தனை விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்
கால பைரவருக்கு மூன்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம் அல்லது 9 விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம் அல்லது ஆறு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் இப்படி வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மற்றும் கால பைரவர்னுடைய முழு சக்திகளும் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டுமல்லாமல் சனீஸ்வரனின் உடைய குருவான கால பைரவரை நீங்கள் வழிபாடு செய்வதால் சனீஸ்வரனுடைய தாக்கமும் உங்களுக்கு குறைவதற்கு மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன அதனால் ஞாயிற்றுக்கிழமையில் விளக்கேற்றி காலபைரவரை வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.