கர்மா என்றால் என்ன ஒருவருடைய வாழ்க்கையில் கருமா எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவை முழுமையாக படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். பொதுவாக கர்மா என்பது ஒருவர் வாழ்நாளில் செய்யக்கூடிய செயல் நடக்கக்கூடிய நடவடிக்கைகள் அனைத்துமே கர்மா என்று சொல்வார்கள். கர்மா என்றால் வேறொன்றும் இல்லை நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய எல்லா விஷயங்களும் கர்மா கர்மாவின் அடிப்படையில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம். கர்மா என்பது ஒருவரோடு மற்றொருவர் தொடர்புடையது ஒருவருடைய கர்மா இன்னொருத்தர் தொடர்பு இருந்தால் மட்டுமே அந்த கர்மா தீரும், சரி கர்மா எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக கருமா இரண்டு வகையாக பிரிக்கலாம் நன்மைகள் தரக்கூடிய கர்மா அதே போல எதிர்மறையான விஷயங்களை தரக்கூடிய கர்மா என்று இரண்டு விஷயமாக நாம் கர்மாவை பிரிக்கலாம். நல்லவிதமான கர்மா நாம் செய்யக்கூடிய நல்ல விஷயங்களுக்கு ஏற்ப கர்மா நமக்கு திரும்பி வரும் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பார்கள் அதைப் பொறுத்து நல்ல கர்மா வேலை செய்கிறது.
எதிர்மறையான கர்மா நாம் செய்யக்கூடிய எதிர்மறையான விஷயங்கள். ஒருவருக்கு இன்னொருத்தர் செய்யக்கூடிய எதிர்மறையான விஷயங்களின் அடிப்படையாக நமக்கு எதிர்மறையான விஷயங்கள் திருப்பி கிடைக்கிறன. அதனால் நல்லது செய்தால் நல்லது நடக்கும் எதிர்மறையான விஷயங்கள் செய்தால் எதிர்மறையாக நடக்கும் என்பது எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
பொதுவாக கர்மாவை ஒரு மனிதன் பூஜை செய்வதாலோ பரிகாரம் செய்வதாலோ நிச்சயமாக அந்த கர்மாவை முழுவதுமாக நம்மை விட்டு போய்விடும் என்று நாம் ஆணித்தனமாக சொல்ல முடியாது கர்மா அவ்வாறு நம்மை விட்டுப் போகவும் போகாது. கர்மாவை நம்மிடமிருந்து விளக்க வேண்டும் என்றால் கர்மாவை விட்டு நாம் விலகி வர வேண்டும் என்றால் நிச்சயமாக அந்தக் கர்மாவை அனுபவித்தால் மட்டுமே அது நம்மை விட்டுப் போகும் இல்லையென்றால் நிச்சயமாக போகாது.
பல ஜோசியக்காரர்கள் பல பூசாரிகள் சொல்வார்கள் உங்களுடைய கர்மா நல்லவிதமாக அமைவதற்கு நான் உங்களுக்காக பூஜை செய்கிறேன் எனக்கு நீங்கள் இவ்வளவு பணத்தை கொடுங்கள் உங்களுக்காக நான் உங்கள் கர்மாவை குறைக்க பூஜைகளை செய்கிறேன் என்று யாரேனும் சொன்னால் தயவு செய்து பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். ஏனென்றால் கர்மாவை ஒரு மனிதன் அனுபவிப்பதால் மட்டுமே நிரந்தரமாக கர்மாவை விட்டு பிரிய முடியும் என்பதை மறந்து விட வேண்டாம், அதை தவிர்த்து யாரேனும் உங்களிடம் கர்மாவினுடைய வீரியம் குறைவதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லி உங்களிடம் பணத்தை கேட்டால் நீங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.