ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் அவர்களுடைய கர்மாவை பொருத்தே நடந்துகொண்டிருக்கின்றன அப்படிப்பட்ட கருமா மற்றும் கர்மவினை இரண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் என்னென்ன செய்கிறது எப்படி செய்கிறது என்பதைப் பற்றியும். கர்மா என்றால் என்ன கர்மவினை என்றால் என்ன என்பதைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.
கர்மா என்றால் என்ன.?
கர்மா என்பது நமக்கு நடக்கக்கூடிய நல்லதோ கெட்டதோ மற்றவர்களால் நமக்கு வரக்கூடிய தீமை அல்லது நன்மை இப்படி எதுவானாலும் சரி மற்றவர்களால் அல்லது நம் வாழ்க்கையில் நடக்க கூடிய விஷயங்கள் எல்லாமே கர்மா அடிப்படையில் நமக்கு ஒவ்வொரு விஷயங்களும் நடந்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டு நம்மிடம் யாராலும் சண்டையிட்டால், நம்மிடம் யாராவது பேசினாலோ, அல்லது மற்றவர்களுக்கும் நமக்கும் இடையில் நடக்கக்கூடிய விஷயம் என்பது கர்மா அடிப்படையிலேயே நாம் மற்றவர்களிடமும் மற்றவர்கள் நம்மிடமும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது நல்ல விதமான விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விதமான விஷயமாக இருந்தாலும் சரி கர்மாவின் அடிப்படையிலேயே நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம்
கர்ம வினை என்றால் என்ன.?
கர்ம வினை என்பது நாம் செய்யும் செயலுக்கான தண்டனை நாம் செய்யும் செயலுக்கான பலன் இதைதான் நாம் கர்மவினை என்கின்றோம். எடுத்துக்காட்டு நாம் ஒருவரை காயப்படுத்தினால் நாம் ஒருவரை துன்பப் படுத்தினால் அதனுடைய விளைவாக நமக்கு திரும்ப பதிலுக்கு பதில் ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அது கர்மவினை. நாம் செய்த வினைக்கு ஏற்ப வினை நம்மை வந்து சேரும் இதை கர்ம வினை என்கின்றோம்.
இப்போது உங்களுக்கு நன்றாக புரியும் கருமா வேறு கர்மவினை வேறு. கருமமும் கரும வீணையும் ஒன்று அல்ல இரண்டும் வேறு வேறு என்பதை இப்போது உங்களால் உணர்ந்திருக்க முடியும். ஆம் நாம் ஒருவருக்கு செய்வது என்பது கருமா அல்லது மற்றவர் நமக்கு செய்வது கருமா நாம் செய்த பாவத்திற்கு திரும்ப நாம் தண்டனை அனுபவித்து கர்மவினை.
இதன் அடிப்படையிலேயே நம் முன்னோர்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதைப் பேசுங்கள் நல்லதை பழகுங்கள் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். காரணம் கர்மா கர்மவினை இரண்டிலிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தவறுகளை செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
கர்மவினை கர்மாவை தீர்க்கும் ஒரே வழி:
கர்மா மற்றும் கர்மவினை இந்த இரண்டையும் ஒரு மனிதன் அனுபவிக்காமல் முற்றிலுமாக அழிக்க முடியாது. ஒரு மனிதன் கர்மா மற்றும் கர்மவினை இரண்டையும் அனுபவித்த பிறகே இந்த கருமமும் கரும வினையும் ஒரு மனிதனை விட்டு செல்லும், அதை தவிர அவனால் தப்பிப்பதற்கு வழியே இல்லை.
சில சமயம் நாம் எதிர்பார்த்த விஷயம் சீக்கிரமாக நடந்துவிடும் சில சமயம் நாம் எதிர்பார்த்த விஷயம் தாமதமாக நடக்கும் இது அனைத்துககும் காரணம் நம்முடைய கருமா மற்றும் கர்மவினை இதன் அடிப்படையிலேயே நமக்கு நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டிருக்கிறது
இனியாவது புரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒவ்வொரு விஷயமும் கர்மாவின் அடிப்படையிலேயே நடந்து கொண்டிருக்கிறது என்று. அதேபோல உங்களுக்கு நடக்கும் தீமைகள் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும் கர்மவினை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்