காய்ச்சல் வரும்போது என்ன சாப்பிட வேண்டும் / காய்ச்சல் வரும்போது எதை சாப்பிட்டால் நன்மை.? What to eat when you have a fever / What is good to eat when you have a fever? :-
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது எதை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
ஒரு மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்களுடைய ஜீரண உறுப்பு சரியாக வேலை செய்யாது அதனால்தான் ஒரு மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படும் போது பசியின்மை ஏற்படுகிறது ஒரு வார காலம் பசி எடுப்பதில்லை மாற்றாக மருந்து சாப்பிட்ட பிறகு இரண்டு நாள் கழித்து பசி எடுக்க ஆரம்பிக்கின்றன அப்படி காய்ச்சல் ஏற்படும்போது நாம் எது சாப்பிட்டால் நம்முடைய ஜீரண உறுப்புக்கு நல்லது வாருங்கள் ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம்.
காய்ச்சல் ஏற்படும்போது நாம் எதை சாப்பிட்டால் நன்மை
1.காய்ச்சல் ஏற்படும்போது நிச்சயமாக ஜீரண உறுப்பு சரியாக வேலை செய்யாது அதனால் அரிசி வருக்கப்பட்டு காய்ச்சப்பட்ட கஞ்சி மிகவும் நல்லது ஜீரண உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை என்பதனால் கஞ்சி சாப்பிட்டால் ஜீரணம் உடனடியாக ஆறும் அது வயிற்றுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நம் உடலை பாதுகாக்கும் அதனால் காய்ச்சல் ஏற்படும்போது கண்டிப்பாக கஞ்சி சாப்பிட வேண்டும்.
2. நான் கஞ்சி சாப்பிடுவதில்லை என்று சொல்லக்கூடியவர்கள் பால் சாப்பிடலாம் அல்லது பாலோடு சேர்ந்து பிஸ்கட் அல்லது பிரட் ஏதாவது சாப்பிடலாம் அதாவது உடனடியாக ஜீரணமாக கூடிய பொருள் எதுவோ அதை உண்பது நல்லது.
3. காய்ச்சல் ஏற்படும்போது எந்த பழத்தை சாப்பிட்டால் நல்லது என்று கேட்கக் கூடியவர்கள் ஆப்பிள் மற்றும் சாத்துக்குடி இது இரண்டையும் சாப்பிடுவது நன்று.
4. கடைகளில் ஆப்பிள் ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் என்ற பெயரில் தேவையில்லாத கெமிக்கல் கலந்து கொடுப்பார்கள் அதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.