கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது / How do we know that God is with us? :-
பொதுவாக மனிதனாகப் பிறந்த அத்தனை பேருக்குமே ஒரு சிறிய எண்ணம் இருக்கும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் இருக்கக்கூடிய ஒன்று அந்த வகையில் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை எப்படி கண்டறிவது :-
0. நீங்கள் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளும்போது எனக்கு அந்த விஷயம் நடந்தால் உடனடியாக உன்னுடைய கோவிலுக்கு நான் வருகின்றேன் என்று வேண்டிக்கொண்டு அதன்படி நீங்கள் எதிர்பார்த்த விஷயம் உங்களுக்கு நடக்கும் போது நீங்கள் வேறு ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும்போது உங்களையே அறியாமல் நீங்கள் முதலில் வேண்டிய அந்த கோவிலுக்கு உங்களை அந்த கடவுள் வரவழைப்பார் அப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம் கடவுள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றார் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார் என்று.
1. நீங்கள் கோவிலில் அமர்ந்து கடவுளைப் பார்த்து பேசும்போது உங்கள் வேண்டுதல் உங்களுடைய வார்த்தைகள் கடவுள் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது உணர்த்தும் வகையில் மணி ஓசை கேட்கும் அல்லது யாராவது ஒருவர் உங்களுடைய மன எண்ணத்திற்கு பதில் சொல்வார்கள் அல்லது சிறு சிறு சத்தங்களின் மூலமாக உன்னுடைய பேச்சை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று கடவுள் நம்மை புரிந்து கொள்ளும்படி உணர்த்துவார்.
2. நீங்கள் கடவுளை நினைத்து மனதிற்குள் பேசும்போது நீங்கள் பேசக்கூடிய வார்த்தைக்கு உங்களை சுற்றி இருக்கக்கூடிய யாரோ ஒருவர் பதில் சொல்ல நேரிடும்.
3. கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் நீங்கள் கவலையில் இருக்கும் போது அல்லது சங்கடத்தில் இருக்கும் போது கடவுளே எனக்கு உதவி செய் என்று வேண்டும்போது கண்ணுக்குத் தெரியாத யார் என்று தெரியாத யாரோ ஒருவர் உங்களுக்கு வந்து உதவி செய்வார்கள்.
மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு விஷயங்களைக் கொண்டு கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற ஒரு உண்மையை நம்மால் உணர முடியும்.