கடவுள் என்றால் யார் உண்மையில் கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு பதிலை இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக கடவுள் ஒருவருக்கு எப்போது ஞாபகத்திற்கு வருகின்றார் என்றால் மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலை வரும்போது கடவுளின் ஞாபகம் தோன்றுகிறது. சரி இது ஒரு புறம் இருக்கட்டும் கடவுள் இருக்கின்றாரா என்ற கேள்வி பல பேர் கேட்டிருப்பார் அப்படி கடவுள் உயிரோடு இருந்திருந்தால் நம்முடைய கஷ்டங்களுக்கு அவர் தீர்வை கொடுத்து இருக்கலாமே என்ற சந்தேகம் பல பேருக்கு எழுந்திருக்கும், ஆம் இந்த பதிவை படிப்பதன் மூலமாக கடவுள் என்றால் யார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.
கடவுள் என்ற சொல் நம்பிக்கை என்று பொருள் ஒரு மனிதன் குடும்பம் உறவு, நண்பர்கள், அனைவரும் இருந்தும் தனிமையில் உணரும் போது கடவுள் அங்கு துணையாக நிற்கின்றான். அனைவரும் இருந்தும் இல்லாமல் இருப்பது போன்ற உணர்வுகளை கொண்ட ஒரு மனிதன் புதிதாக தொழில் தொடங்கும் போதும் சரி ஏதோ ஒரு விஷயத்தில் இறங்கி வேலை செய்யும்போதும் சரி தனக்கு உதவியாக யாரும் இல்லை என்று உணரக்கூடிய ஒவ்வொருவரும் கடவுள் மீது பாரத்தை போட்டு நான் இந்த செயலை செய்கின்றேன் எனக்கு துணையாக இருங்கள் என்று சொல்லி ஆரம்பிப்பார். ஆரம்பிக்கும் விஷயம் அவர்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக அமைகிறது அதனால் கடவுள் என்ற சொல் நம்பிக்கை என்று பொருள்.
அதேபோல் கடவுள் பெயரை சொல்லி ஒரு விஷயத்தை செய் என்று சொன்னால் அதை நிச்சயமாக செய்து முடிப்பார்கள். அந்த காலத்தில் அறிவு பூர்வமாக யோசித்து கடவுள் என்ற சொல்லை கண்டுபிடித்தார்கள், பொதுவாக ஒரு மனிதனிடம் சென்று இதை நீ செய் என்று சொன்னால் அவர் செய்ய மாட்டார் இதுவே கடவுளுக்காக நீ இதை செய்யவேண்டும் என்று சொன்னால் உடனடியாக அவர்கள் அந்த விஷயத்தை செய்வார்கள். இன்று வரை நாம் கடவுளின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு அறிவுப்பூர்வமான விஷயத்தையும் செய்து கொண்டிருக்கிறோம் காரணம் கடவுள் என்று சொல் நம்பிக்கையென்று பொருள்.
குறிப்பாக கடவுள் கோவில்களில் இருக்கின்றார் என்று ஒரு இடத்தை தேர்வு செய்து நாம் அங்கு தான் கடவுளை வணங்க வேண்டும் என்று சொல்கின்றோம். பொதுவாக கோவிலின் மூலஸ்தானம் என்று சொல்லக்கூடிய கருவறை காந்த சக்திகள் நிறைந்த இடமாக இருக்கும் அதற்கு நடுவில் கடவுள் இருப்பார் கடவுளுடன் அந்த காந்த சக்தி சேர்ந்து வணங்கக்கூடிய பக்தர்கள் மேல் படும்போது அவர்களுடைய அறிவுக்கூர்மை அதிகமாகும் அதனால் தான் ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கடவுள் என்ற ஒருவரை அங்கு நிற்க வைத்து அனைவரும் வணங்க வைத்தார்கள்.
அதேபோல கடவுளை வணங்க கோவிலுக்கு வரக்கூடிய அனைவரும் சமம் என்ற உணர்வை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மனிதனும் சமம் அதனால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் பணக்காரர்கள் ஏழைகளுக்கு அன்னப் பிரசாதத்தை வழங்க வேண்டும் என்ற அறிவுபூர்வமான விஷயங்களையும் கொண்டு வந்தார்கள் இப்போது நீங்களே சொல்லுங்கள்.