கடவுள் என்றால் யார்.? கடவுளை பார்க்க முடியுமா.? கடவுளை யார் கண்டுபிடித்தார்கள்.? / Who is God | God Meaning Explain in Tamil :-
கடவுள் என்றால் யார் கடவுளை பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு இந்த பதிவில் நாம் தெளிவாக அதற்கான விடைகளை பார்ப்போம்.
கடவுள் என்ற ஒரு சொல்லையும் கடவுள் என்ற ஒரு உருவத்தையும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தார்கள் இதற்கு அறிவியல் பூர்வ கதை ஒன்று உள்ளது.
உங்களுடைய மன வேதனையை நீங்கள் ஒரு மனிதரிடம் சொல்லும் போது அந்த மனிதன் ஒரு நாள் உங்கள் கதையை கேட்பார் அல்லது இரண்டு நாள் கேட்பார் அல்லது ஒரு மாத காலம் நீங்கள் புலம்பக் கூடிய புலம்பலை கேட்பார் அதற்கு மேல் அவர்கள் உங்களைப் பார்த்தாலே ஓடச் செய்வார்கள்.
அப்படி ஒவ்வொரு மனிதனுடைய மன சங்கடங்களையும் தினந்தோறும் ஒரு உயிருள்ள மனிதனிடம் சொல்ல முடியாது அப்போ நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார்கள் அவர்தான் கடவுள் அந்த கடவுளிடம் நீங்கள் வருட முழுவதும் தினம்தோறும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் உங்களுடைய கஷ்டத்தை சொல்லி கொண்டு இருந்தாலும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக உங்களையே பார்க்கும்படி அந்த சிலை இருக்கும்.
சைக்காலஜிக்காக அதாவது உளவியல் ரீதியாக ஒரு மனிதன் தன்னுடைய மனதில் இருக்கக்கூடிய பாரத்தை ஒருவரிடம் சொல்லும் போது அந்த பாரம் குறைக்கப்படுகிறது அந்த வேலையை தான் கோவிலில் இருக்கும் சிலை செய்கிறது.
இப்போது சொல்லுங்கள் கடவுள் இல்லை என்றால் மனிதர்களின் நிலைமை என்ன ஆகும்.
ஒரு மனிதனிடம் ஒரு மாதத்திற்கு மேல் தன்னுடைய கவலையை சொல்ல முடியாது ஆனால் ஒரு கடவுளிடம் 365 நாள் சொல்லினாலும் அவர் அமைதியாக இருப்பார் மாறாக உன் மனதில் இருக்கக்கூடிய வலியும் வேதனையும் போகும் இதை நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை செய்துள்ளனர் அதற்கு பெயர் தான் கடவுள.
பின்குறிப்பு
மேலே சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் அறிவியல் பூர்வ விஷயம். ஆனால் உண்மையில் தமிழ் சமூகம் கடவுளாக வணங்கக்கூடிய அத்தனை பேரும் உயிரோடு வாழ்ந்த முன்னோர்கள் நம்முடைய முப்பாட்டங்கள் என்பதை மறந்து விடக்கூடாது.