கடன் தீர காமாட்சியம்மன் வழிபாடு :-
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் யாரோ ஒருவரிடம் கண்டிப்பாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் அந்த வகையில் கடன் வாங்கியவர்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு தீர்வு காண காமாட்சி அம்மன் வழிபாடு நமக்கு மிகச் சிறந்த வழிபாடாக திகழ்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் காமாட்சி அம்மன் குத்துவிளக்கு கண்டிப்பாக இருக்கும் இதை வைத்து நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயத்தின் மூலமாக நம்முடைய கடன் பிரச்சனை முற்றிலுமாக தீரும் கடன் பிரச்சனை தீர்ந்து கடன் இல்லாத வாழ்க்கையை உங்களால் வாழ காமாட்சி அம்மன் பிரார்த்தனை உங்களுக்கு கை கொடுக்கும்.
அந்த வகையில் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நீங்கள் சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.
இப்படி நீங்கள் காமாட்சி அம்மனை வழிபடுவதால் கண்டிப்பாக உங்களுடைய கடன் பிரச்சனை தீரும் மேலும் கடன் பிரச்சினையிலிருந்து விடுபட்டு உங்களால் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைய இந்த வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும் வாருங்கள் எப்படி வணங்குவது என்பதை பார்ப்போம்.
கடன் பிரச்சனை தீர காமாட்சி விளக்கு வழிபாடு :-
◆ காமாட்சி அம்மன் விளக்கை தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தட்டை வைத்து, சிறிதளவு பச்சரிசி வைத்து அதன்மேல் காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும்.
◆ விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
◆ கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று குல தெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார பிராத்தனை செய்ய வேண்டும்.
◆ எப்போதும் குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு பிறகு நீங்கள் எந்த கடவுளை வேண்டினாலும் அவனுக்கு பலன் அதிக அளவு கிடைக்கும் அதனால் காலையில் எழுந்தவுடன் முதலில் குலதெய்வத்தினுடைய நாமத்தை உங்கள் வாயில் சொல்ல வேண்டும்