கடக ராசியில் பிறந்தவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் மற்றும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பதை பற்றி கண்டிப்பாக கடக ராசியில் பிறந்தவர்களும் சரி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சரி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கடக ராசியில் பிறந்தவர்கள் மற்றும் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆலங்குடி ஊரில் அமைந்திருக்கக் கூடிய குரு பகவான் கோவிலுக்கு சென்று வளர்பிறை வியாழக்கிழமை காலையில் முதல் தரிசனமாக குரு பகவானை வணங்கி விட்டு அந்த கோவிலை 25 முறை சுற்றி வந்து ஒரு மணி நேரம் அமர்ந்து குருபகவானை நினைத்து மனதார வேண்டிக் கொண்டால் நல்லது நடக்கும்.
குரு பகவான் கோவிலில் இந்த பரிகாரங்கள் செய்து விட்டு அங்கிருந்து சிறிது தொலைவில் தஞ்சை பெரிய கோவில் அமைந்திருக்கின்றன அங்கு சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு சென்று விட வேண்டும் இந்த இரண்டு விஷயத்தை செய்தால் கண்டிப்பாக உங்க வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை காண முடியும்.