கடகம் ராசி + ரிஷபம் லக்கினத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் பண்புகள் / உங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிதான் இருக்கும்
Kadakam Rasi + Rishabam Lagnam Characters in tamil
லக்கினம் : கடகம் ராசி + ரிஷபம் லக்கினம்
ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் வேண்டாத மனக்கவலைகள் தரும் செயல்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் அவமானம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்லோரின் நட்பை முழுவதுமாக இழக்க நேரிடும். அன்றாடம் உபயோகிக்கும் ஆயுதக்கருவிகளைக் கையாளும்போது கவனம் தேவை.
பெண்கள் மூலம் பொருள் கிடைக்கும். ஆபரணங்களை நிறைவாகப் பெற்றிருப்பீர்கள். தொழிலதிபர்களின் நட்புறவு ஏற்படும். எப்போதும் மனநிறைவுடனும், முக மலர்ச்சியுடனும் தோன்றுவீர்கள். ஐந்தாமிடம் கன்னீராசியாக அமைந்திருப்பதால் உங்களுக்கு நல்ல. அழகுள்ள பெண் குழந்தைகளைப் பெற்று மகிழ வாய்ப்புண்டு. அப்பெண் குழந்தைகள் ஆபரணப் பிரியராகவும். பதிபக்தி நிறைந்தவராகவும் இருப்பார்கள். பத்தாம் இடம் கும்ப ராசியாக அமைந்திருப்பதால் விரோதிகளின் செயல்களை எதிர்க்கும் திறமை உள்ளவராக இருப்பீர்கள். உங்களுடைய உரையாடலில் இனிமையும், பொருளும் நிறைந்திருக்கும்.
தங்களுடைய லக்னமானது, அதனுடைய இடத்தில் முதலாவது திரேக்காணத்தில் பொருந்தி இருப்பதால். ஏராளமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் அது ஒரு போதும் தங்கள் கையில் தங்காது. தங்கள் மனக்கவலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். தங்களிடத்திலுள்ள எல்லாவற்றையும் செலவழித்து விடுவீர்கள். தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கென்று எதையும் விட்டுவைக்க மாட்டீர்கள். கடன்களுக்கு ஆளாகாதவாறு, ஜாக்கிரதையாக இருங்கள்.
தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வருடங்கள் 21. 23, 31, 42, 51, 65, 68.