ஒரு ஊர் என்றால் கோவில் முக்கியம் ஒரு வீடு என்றால் பூஜை அறை மிக மிக முக்கியம் பூஜை அறை ஒரு வீட்டில் இருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் அந்த வீட்டுக்கு வரும் என்பது ஐதிகம் அதனால்தான் ஊருக்கு ஒரு கோவில் வீட்டுக்கு ஒரு பூஜை அறை என்று நம் முன்னோர்கள் வகித்த விதியாகும். இன்று இந்த பதிவில் பூஜை அறை எந்த திசையை நோக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்க போகின்றோம்
பொதுவாக வீடு எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கட்டும் அதாவது கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு இந்த நான்கு திசைகளில் எந்த திசையைப் பார்த்தவாறு வேண்டுமானாலும் வீடு இருக்கட்டும்.
ஆனால் பூஜையறை கிழக்கு நோக்கியவாறு இருப்பது மிகவும் சிறப்பு அதாவது வீடு கட்டும்போது ஆள் பகுதியில் கிழக்கு பார்த்த மாதிரி இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும். ஒரு சில வீடுகளில் வடக்கு பார்த்த மாதிரி பூஜையறை வாசப்படி இருக்கும் ஆனால் அந்த ரூமுக்குள் போனாள் சாமியின் புகைப்படம் கிழக்கு பார்த்த மாதிரி தான் இருக்க வேண்டும் அதுதான் சிறப்புமிக்க வழிபாடாகும். பூஜை அறையின் வாசப்படி கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு நான்கு புறங்களில் எந்தப்பக்கம் பார்த்தவாறு இருந்தாலும் பரவாயில்லை அதற்குள் இருக்கக்கூடிய சாமியின் புகைப்படம் கிழக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும் அது தான் அதிகம்.
கோவில்களில் கடவுள் சூரியன் உதிக்கும் பக்கம் அதாவது கிழக்கு பார்த்த மாதிரி மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய விக்ரகம் இருக்கும். அதே போல நாம் வீடு கட்டும் போதும் சரி அல்லது வீட்டுக்கு குடி போகும் போதும் சரி பூஜையறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாமி புகைப்படம் பொதுவாக கிழக்கு பார்த்த மாதிரி வைக்க வேண்டும் அதாவது கோவில்களில் இருப்பது போல நாம் நம்முடைய புகைப்படத்தை வைக்க வேண்டும் அதுதான் சிறப்பு. அதனால்தான் நமக்கு நல்ல விதமான ஆன்மீக சக்திகள் நம் வீட்டிற்கும் நடக்கும் நமக்கும் நடக்கும்
பூஜை அறை இல்லாதவர்கள் சிலர் சமையல் அறையில் வைத்துக் கொள்வார்கள் அப்படி ஒரு வீட்டுக்குள் பூஜை அறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது நீங்கள் சமையலறைக்குள் சாமி புகைப்படத்தை வைத்தாலும் சரி பொதுவாக கிழக்கு பார்த்த மாதிரி சாமி புகைப்படம் வைப்பது மிகவும் சிறந்தது
அதாவது கிழக்கு பார்த்த மாதிரி ஏன் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றார் சூரிய பகவான் மிக முக்கியம் அதாவது சூரியன் எப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பாரபட்சமின்றி தன்னுடைய ஒளியை தருகிறாரோ அது போல கடவுளும் சூரியனைப் பார்த்தவாறு இருக்கும் போது சூரியனின் உடைய முழு பார்வை கடவுளின் மீது விழும் போது ஒருவிதமான சக்தி பிறக்கும் என்பது ஐதீகம் இதனால் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த இடமும் தெய்வீக மணம் வீசும் என்பதற்காகவே கிழக்கு பார்த்த மாதிரி புகைப்படத்தை வைக்க நம் முன்னோர்கள் சொன்னார்கள்